நல்குரவு

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.   (௲௪௰௨ - 1042) 

வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்  (௲௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.  (௲௪௰௨)
— மு. வரதராசன்


இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.  (௲௪௰௨)
— சாலமன் பாப்பையா


பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது  (௲௪௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀫𑁃 𑀏𑁆𑀷𑀯𑁄𑁆𑀭𑀼 𑀧𑀸𑀯𑀺 𑀫𑀶𑀼𑀫𑁃𑀬𑀼𑀫𑁆
𑀇𑀫𑁆𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀇𑀷𑁆𑀶𑀺 𑀯𑀭𑀼𑀫𑁆 (𑁥𑁞𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum
— (Transliteration)


iṉmai eṉavoru pāvi maṟumaiyum
im'maiyum iṉṟi varum.
— (Transliteration)


The demon of poverty takes away The joys of this life and the next.

ஹிந்தி (हिन्दी)
निर्धनता की पापिनी, यदि रहती है साथ ।
लोक तथा परलोक से, धोना होगा हाथ ॥ (१०४२)


தெலுங்கு (తెలుగు)
లేమి యనెడు పాపి లేకుండగాఁజేయు
ఇహపరాల రెంట నేరికైన. (౧౦౪౨)


மலையாளம் (മലയാളം)
ദാരിദ്ര്യമാം കൊടും പാവി വന്നണഞ്ഞൊട്ടി നിൽക്കുകിൽ ഇരുലോകത്തിലും സൗഖ്യം നിശ്ചയം നഷ്ടമായിടും (൲൪൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬಡತನವೆಂಬ ಪಾಪಿಯು ಒಬ್ಬನ ಮನೆಯನ್ನು ಪ್ರವೇಶಿಸಿದಲ್ಲಿ, ಅವನಿಗೆ ಇಹ ಜನ್ಮದಲ್ಲಿಯೂ ಮರು ಜನ್ಮದಲ್ಲಿಯೂ ಸುಖ ಸಂತೋಷಗಳು ಇಲ್ಲವಾಗುವುದು. (೧೦೪೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
लभेत् सहवासं यो दारिद्र्याभिधपापिना ।
ऐहिकामुष्मिकसुखं न विन्देत् स मानव: ॥ (१०४२)


சிங்களம் (සිංහල)
දුගී බව නමැති - පාපෙන් වෙලුන දනහට මෙලොවත් එලොව දෙක - සැපක් නැත දුක විනා කවදත් (𑇴𑇭𑇢)

சீனம் (汉语)
卑劣貧賤, 破壞世間之歡樂. (一千四十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Setan Kepapaan ia-lah musoh kegembiraan di-dalam hidup ini, juga di-dalam hidup2 yang akan datang.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
빈곤은이승과내세의즐거움을파괴하는죄인이다. (千四十二)

உருசிய (Русский)
Грешница по имени Нужда подступает к человеку всегда — как в нынешнем, так и будущем рождении

அரபு (العَرَبِيَّة)
الفقر المدقع عدو لابتهاجات الحياة فى هذه الدنيا وفى الآخرة (١٠٤٢)


பிரெஞ்சு (Français)
Le misérable état appelée indigence, lorsqu'il écheoit a quelqu'un, lui fait perdre les délices de la terre et du ciel.

ஜெர்மன் (Deutsch)
Der Sünder «Armut» kommt und nimmt dieses und das nächste Leben.

சுவீடிய (Svenska)
Den demon som kallas fattigdom förstör all lycka såväl i detta som i nästa liv.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Unica ilia peccatrix - inopia - itn venit, ut et haec et altera vita intereant. (MXLII)

போலிய (Polski)
Ona resztkę nadziei z serc ludzkich wypędza I rzutuje na przyszłość w zaświatach.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22