உழவு

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.   (௲௩௰௮ - 1038) 

பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது; இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும்  (௲௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.  (௲௩௰௮)
— மு. வரதராசன்


உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.  (௲௩௰௮)
— சாலமன் பாப்பையா


உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது  (௲௩௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑀷𑁆𑀶𑀸𑀮𑁆 𑀏𑁆𑀭𑀼𑀯𑀺𑀝𑀼𑀢𑀮𑁆 𑀓𑀝𑁆𑀝𑀧𑀺𑀷𑁆
𑀦𑀻𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑀷𑁆𑀶𑀢𑀷𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼 (𑁥𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Erinum Nandraal Eruvitudhal Kattapin
Neerinum Nandradhan Kaappu
— (Transliteration)


ēriṉum naṉṟāl eruviṭutal kaṭṭapiṉ
nīriṉum naṉṟataṉ kāppu.
— (Transliteration)


Manuring is crucial than ploughing. After weeding, Protection is crucial than watering.

ஹிந்தி (हिन्दी)
खेत जोतने से अधिक, खाद डालना श्रेष्ठ ।
बाद निराकर सींचना, फिर भी रक्षण श्रेष्ठ ॥ (१०३८)


தெலுங்கு (తెలుగు)
చాలు కన్న నెరువు జలముకన్నఁ గలుపు
కలుపు కన్న కంచె బలము కృషికి. (౧౦౩౮)


மலையாளம் (മലയാളം)
പാകത്തിന്ന് വളംചേർക്കലുഴവിലും പ്രധാനമാം കളനീക്കി; ജലം പായ്ക്കലേക്കാൽ മുഖ്യം സുരക്ഷയാം (൲൩൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನೇಗಿಲಿನಿಂದ ಉಳುವುದಕ್ಕಿಂತ, ಭೂಮಿಗೆ ಸಾರ ನೀಡುವುದು ಒಳ್ಲೆಯುದು; ಕಳೆಯನ್ನು ತೆಗೆದ ಮೇಲೆ, ನೀರು ಹಾಯಿಸುವುದಕ್ಕಿಂತ (ಬೆಳೆಯ) ಕಾವಲು ಕಾಯುವುದು ಮೇಲು. (೧೦೩೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कर्षणाद् दोहदं श्रेष्ठं द्वयं कृत्वा ततस्तृणम् ।
निष्कास्य रक्षणाद्भूमे: न मुख्यं जलसेचनम् ॥ (१०३८)


சிங்களம் (සිංහල)
සී සෑමට වඩා - යෙදුමත් පොහොර හොඳ වෙයි වල් නෙලුමෙන් දෙවනු - වතූර බැඳ රැකූමයි ඉතා හොඳ (𑇴𑇬𑇨)

சீனம் (汉语)
施肥優於犁鋤; 田地刈除雜草之後, 守護更重於灌漑. (一千三十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Membaja lebeh banyak memberi hasil daripada membajak: dan apa- kala tanah sudah di-rumput, memelihara-nya lebeh menguntongkan dari mengayeri-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
거름주기는일구는것보다더많은이익이있다.제초를한후, 단속하는것는급수보다더중요하다. (千三十八)

உருசிய (Русский)
Лучше опускать в землю навоз, чем вспахивать ее. А после прополки лучше беречь посевы, чем поливать их

அரபு (العَرَبِيَّة)
السماد أكثر إفادة من حرث الأرض وحفرها ولكن إذا ماأزيلت وأقلعت اعشابها الضارة فالتحفظ منها أكثر منفعة من سقيها وريها (١٠٣٨)


பிரெஞ்சு (Français)
Fumer vaut mieux que labourer. Après ces deux travaux et après le sarclage, surveiller les cultures vaut mieux qu'arroser.

ஜெர்மன் (Deutsch)
Zu düngen ist besser, als zu pflügen - nach dem Jäten von Unkraut ist Bewachen besser als Wässern.

சுவீடிய (Svenska)
Viktigare än att plöja är att gödsla jorden. Sedan man har rensat bort ogräset är vakthållningen av större vikt än bevattningen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Praestat fimum projicere quam arare; si agrum mundaris, prae- stat custodire quam irrigare. (MXXXVIII)

போலிய (Polski)
A podlewa ją póki jest wody spragniona I szkodniki starannie odpędza.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22