உழவு

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.   (௲௩௰௬ - 1036) 

உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், ‘யாவரும் விரும்பும் உண்வையும் கைவிட்டோம்’ என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது  (௲௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.  (௲௩௰௬)
— மு. வரதராசன்


உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.  (௲௩௰௬)
— சாலமன் பாப்பையா


எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்  (௲௩௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀵𑀯𑀺𑀷𑀸𑀭𑁆 𑀓𑁃𑀫𑁆𑀫𑀝𑀗𑁆𑀓𑀺𑀷𑁆 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀯𑀺𑀵𑁃𑀯𑀢𑀽𑀉𑀫𑁆
𑀯𑀺𑀝𑁆𑀝𑁂𑀫𑁆𑀏𑁆𑀷𑁆 𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀺𑀮𑁃 (𑁥𑁝𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum
Vittemen Paarkkum Nilai
— (Transliteration)


uḻaviṉār kaim'maṭaṅkiṉ illai viḻaivatū'um
viṭṭēmeṉ pārkkum nilai.
— (Transliteration)


Even the desire-free hermits will lose their state If ploughmen fold their hands.

ஹிந்தி (हिन्दी)
हाथ खिँचा यदि कृषक का, उनकी भी नहिं टेक ।
जो ऐसे कहते रहे ‘हम हैं निस्पृह एक’ ॥ (१०३६)


தெலுங்கு (తెలుగు)
పంట నీడఁ దనదు ప్రభుని ఛత్రపు చాయ
నన్య నృపులుఁ జూచు హాలికుండు. (౧౦౩౬)


மலையாளம் (മലയാളം)
കർഷകൻ തൻറെ യത്നങ്ങൾ തൊഴിലിൽ പിൻവലിക്കുകിൽ അന്നവും, ത്യാഗിവര്യന്മാർ ചര്യതാനും മുടങ്ങിടും (൲൩൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಉಳುವವರು ಕೆಲಸ ಮಾಡುವುದನ್ನು ನಿಲ್ಲಿಸಿದರೆ, ಆಶೆಗಳನ್ನೆಲ್ಲ ತೋರದಿದ್ದೇವೆ ಎನ್ನುವ ಸನ್ಯಾಸಿಗಳಿಗೂ ಬಾಳಿನಲ್ಲಿ ನೆಲೆ ಇಲ್ಲವಾಗುತ್ತದೆ. (೧೦೩೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कृषिवालानां हस्तास्तु कृषिहीनो भवेद्यदि ।
विरक्तानां यतीनां च जीवनं दुर्लभं तदा ॥ (१०३६)


சிங்களம் (සිංහල)
අලස වුව ගොවි යෝ - සිත දුරුකරන ආසා තවුසනට තැන නැත - සු පේශල සිල් පවා නො රැකේ (𑇴𑇬𑇦)

சீனம் (汉语)
農人若放棄其耕作, 出家苦行之隱士亦不能不受困. (一千三十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Malah mereka telah menyingkirkan semua keinginan pun akan men- derita apabila petani berdiam tenang memelok badan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
농민들이재배를하지않으면, 수도자도고통을겪게되리라. (千三十六)

உருசிய (Русский)
Если вспахивающие землю праздно сложат руки, то лишаться опоры на земле праведники, восклицающие: «Мы отреклись от земной жизни»

அரபு (العَرَبِيَّة)
إن الذين إختاروا التنسك ورفضوا شهواتهم سيعانون ويقاسون مشقات عند ما يجلس الفلاح طاويا يديه حول مرفقيه (١٠٣٦)


பிரெஞ்சு (Français)
Si la main du cultivateur ploie sans travailler, ceux même qui ont renoncé à la nourriture désirée par tous, ne pourront persévérer dans leur pénitence.

ஜெர்மன் (Deutsch)
Legen die Pflüger ihre Hände in den Schoß, geht sogar der Stand derer zugrunde, die ihren Wünschen entsagen.

சுவீடிய (Svenska)
Om de som brukar jorden sitter med armarna i kors kan ej ens de < asketer> bestå som säger: ”Vi har avsvurit oss alla begär.”
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si aratorum manus componuutur, etiam iis, qui dicunt ,,omnia, quae expetunt ceteri, nos dimisimus" (i. e. ascetae), nullum erit fun damentum. (MXXXVI)

போலிய (Polski)
Nawet mnich będzie musiał zaniechać swej dharmy, Kiedy lud go wspomagać przestanie!
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22