மர பொம்மையை உருவாக்கி, அதை அலங்கரித்து, கயிற்றினால் கட்டி, நடக்கச் செய்து, ஆடச் செய்து, ஓடச் செய்து, வேடிக்கை காட்டுகின்றனர். அதற்குப் பெயர் பொம்மலாட்டம்! ஆனால் அவை உயிர் இல்லாதவை; உணர்ச்சி அற்றவை.
அதுபோல, உள்ளத்திலே நாணம் இல்லாதவர்களின் வாழ்க்கையும், உணர்ச்சியற்றதாய் உயிர் உள்ளது போல தோன்றும்.
அதாவது, மனிதர்கள் தகாத செயல்கள் செய்வதற்கு நாணவில்லை என்றால், தீமையைக் கண்டு நாணவில்லை என்றால், அவர் கையில் உணர்ச்சி இல்லாதவர்கள்.
அத்தகையவர்கள் வாழ்க்கை, பார்த்தவர்களுக்கு சிறப்பாக தெரியுமே தவிர, அவர்களுக்கு நன்மை தீமை பாகுபாடோ, இன்ப உணர்வோ கிடையாது. பொம்மலாட்டத்தை போன்றது.