ஒரு பெண், எத்தகைய சூழ்நிலையாலும் சலனம் அடையாமல், உள்ளத்தாலும் உடலாலும், வாக்காலும் தன் கணவருடன் இணைந்து, அவனையே நேசித்துக்கொண்டிருப்பாளானால், அவள் உத்தமி என்றும், கற்புக்கரசி என்றும் போற்றப்படுவாள்.
அதுபோல, ஒருவன் எத்தனை விதமான இன்பங்களை காணும் பொழுதும் மன உறுதியால் தீய வழியில் செல்லாமல், கட்டுப்பாட்டுடன் என்னத்தை, செயலை நல்ல வழியில் செலுத்தினால் அவன் பெருமை அடைவான்.