கவரிமான் என்பது மான்களில் ஒரு வகை. அதன் உடல் முழுவதும் மயிர் நிறைந்திருக்கும். தன் மயிர்த்திரளிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் அது, உயிர் வாழாது.
அதுபோல, மனிதர்களிலும் சிலர் இருக்கிறார்கள். வீரம், அறிவு, கௌரவம், பூக்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் சிறந்து வாழக்கூடியவர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் மானத்துக்கு கேது வந்தால், தம்முடைய உயிரை விட்டாவது, பெருமையை காப்பாற்றிக் கொள்வார்கள்.
(மானம் கெட்ட பிறகும் உயிரை விடுபவர்கள் உண்டு. அவமானம் வரக்கூடும் என்று முன்கூட்டியே தெரிந்தாலும் உயிரை மாய்த்துக் கொள்வோரும் இருக்கிறார்கள். மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டாகுமானால், உயிர் துறந்து, அதை காப்பாற்றிக் கொள்வார்கள் சிலர்.)
மானம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. எனினும், என்று கூறும் மானம் எது என்றால், தன் தவறு பற்றி, தன் மனமே வருந்த அதனால் ஏற்படும் உணர்ச்சியே சிறந்த மானம் என்பது.