மனிதனின் உயிருக்கு நோய் முதலான துன்பங்கள் உண்டாகும் போது, உடம்பின் மீது ஆசை அதிகரிக்கிறது. உடனே மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்து கொள்வது இயல்பு. எவ்வளவு வயதானாலும், அதை தவிர்ப்பதற்கு இல்லை. என்ன துன்பம் நேரிட்டாலும் உயிரின் மீது ஆசையும், உலகப் பற்றும் விடா.
அதுபோல, சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் பொழுது எல்லாம், அடுத்து வெற்றி பெற்றுவிடலாம், இழந்ததை திரும்பப் பெறலாம் என்ற விருப்பம் கொண்டு சூதாடுவது, சூதாடியின் இயல்பாகும்.
பொருள் இழப்பைத் தவிர இதில் வேறு என்ன இருக்கிறது?
(தருமனும், நளனும் ஆடியோ சூது சொக்கட்டான் என்று புராண வாயிலாக தெரிய வருகிறது. இந்த காலத்தில், சீட்டாட்டம், குதிரை பந்தயம் வேறு பலவும் உள்ளன.)