சூது

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.   (௯௱௩௰௨ - 932) 

பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?  (௯௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.  (௯௱௩௰௨)
— மு. வரதராசன்


ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?  (௯௱௩௰௨)
— சாலமன் பாப்பையா


ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?  (௯௱௩௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀬𑁆𑀢𑀺 𑀦𑀽𑀶𑀺𑀵𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀘𑀽𑀢𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀉𑀡𑁆𑀝𑀸𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑁆
𑀦𑀷𑁆𑀶𑁂𑁆𑀬𑁆𑀢𑀺 𑀯𑀸𑀵𑁆𑀯𑀢𑁄𑀭𑁆 𑀆𑀶𑀼 (𑁚𑁤𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol
Nandreydhi Vaazhvadhor Aaru
— (Transliteration)


oṉṟeyti nūṟiḻakkum cūtarkkum uṇṭāṅkol
naṉṟeyti vāḻvatōr āṟu.
— (Transliteration)


Can gamblers gain anything good in life Who gain one and lose a hundred?

ஹிந்தி (हिन्दी)
लाभ, जुआरी, एक कर, फिर सौ को खो जाय ।
वह भी क्या सुख प्राप्ति का, जीवन-पथ पा जाय ॥ (९३२)


தெலுங்கு (తెలుగు)
ఒకటి వచ్చినట్టి యుత్సాహమున నూరు
వదలు వాని బ్రతుకు బదిలమగునె? (౯౩౨)


மலையாளம் (മലയാളം)
ഒരു നാൾ വിജയം കണ്ടും നൂറുനാൾ തറപറ്റിയും ചൂതാടീടുന്ന ദുർമോഹി മേൽഗതിക്കിരയാകുമോ? (൯൱൩൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಂದನ್ನು ಗೆದ್ದು ನೂರ್ಮಡಿಯಾಗಿ ಕಳೆದುಕೊಳ್ಳುವ ಜೂಜು ಕೋರರಿಗೆ ಸುಖ ಪಡೆದು ಬಾಳುವ ಮಾರ್ಗವುಂಟೆ? (೯೩೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्राप्यौकांशं शतांशानां त्यक्ता द्यूतोपसेवक: ।
धर्मकामप्राप्तिमार्गं न लभेत कदाचन ॥ (९३२)


சிங்களம் (සිංහල)
සියයක් නැති කරන - දිනුමක් පිණිස සිතමින් දිවි ගෙවුමක් ඇද්ද ? - සුදු කරුවන් ලබන යහපත් (𑇩𑇳𑇬𑇢)

சீனம் (汉语)
睹徒一勝而百輸之際, 焉能夢見正當之生活. (九百三十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perhatikan-lah penjudi yang kalah sa-ratus ketika menang-nya hanya satu: sa-sunggoh-nya ada-kah jalan bagi mereka untok hidup baha- gia di-dalam dunia ini?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
하나를얻고백을잃는도박꾼은풍요로운인생을꿈꿀수없다. (九百三十二)

உருசிய (Русский)
Разве отыщет дорогу добра человек азартный, который выигрывает один раз, а проигрывает сотни раз?

அரபு (العَرَبِيَّة)
أنظر إلى المقامرين فإنهم يخسرون مائة مرة عد ما يفوزون فيه مرة واحدة فهل يمكن لهم أن يفلحوا على صفحة هذه الأرض (٩٣٢)


பிரெஞ்சு (Français)
Y a-t-il en vérité, une voie de vivre prospères en vertus et en richesses, aux joueurs qui gagnent un, contre cent qu'ils perdent ?

ஜெர்மன் (Deutsch)
Haben Glücksspieler, die eine «eins» gewinnen, aber «hundert» verlieren, die Mittel für ein gutes Leben?

சுவீடிய (Svenska)
Finns det månne något sätt att leva gott för spelaren som vinner en <gång> men förlorar hundra <gånger>?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Aleatori, qui semel lucratur, centies perdit , num vel una est via, qua bonum lucrans bene vivat ? (CMXXXII)

போலிய (Polski)
Niech pechowy gracz raczej nie czeka odmiany, Skoro go duch hazardu opętał.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22