பெண்வழிச்சேரல்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.   (௯௱௫ - 905) 

தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்  (௯௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.  (௯௱௫)
— மு. வரதராசன்


தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.  (௯௱௫)
— சாலமன் பாப்பையா


எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்  (௯௱௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀮𑁆𑀮𑀸𑀴𑁃 𑀅𑀜𑁆𑀘𑀼𑀯𑀸𑀷𑁆 𑀅𑀜𑁆𑀘𑀼𑀫𑀶𑁆 𑀶𑁂𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀦𑀮𑁆𑀮 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁚𑁤𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum
Nallaarkku Nalla Seyal
— (Transliteration)


illāḷai añcuvāṉ añcumaṟ ṟeññāṉṟum
nallārkku nalla ceyal.
— (Transliteration)


A man who fears his wife will always fear To do good things to good people.

ஹிந்தி (हिन्दी)
पत्नी-भीरु सदा डरे, करने से वह कार्य ।
सज्जन लोगों के लिये, जो होते सत्कार्य ॥ (९०५)


தெலுங்கு (తెలుగు)
సతికి వెఱచు నతఁడు సతతమ్ము వెరచును
సాయపడుటకైన సజ్జనులకు. (౯౦౫)


மலையாளம் (മലയാളം)
സ്ത്രീജിതൻ തൻറെ നേട്ടത്താൽ സജ്ജനങ്ങൾക്ക് നന്മയായ് തോന്നുന്ന സുകൃതങ്ങളെ ചെയുവാൻ ശക്തനായിടാ (൯൱൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮನೆಯೊಡತಿಗೆ ಅಂಜಿ ಬಾಳುವವನು, ಯಾವಾಗಲೂ, ಸಜ್ಜನರಿಗೆ ಒಳ್ಳೆಯದನ್ನು ಮಾಡಲು ಅಂಜುವನು. (೯೦೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
भार्याभीरुर्महात्मभ्यो बहुभ्यश्च निजेच्छया ।
स तु स्वीयधनं चापि दातुं भीतिमवाप्‍नुयात् ॥ (९०५)


சிங்களம் (සිංහල)
බිරිඳට බිය වදින - පුඟූලා සැම විටකම සුදන වැඩ සඳහා - යමක් කරනට බියෙන් පසුවෙයි (𑇩𑇳𑇥)

சீனம் (汉语)
懼内之輩, 永無勇氣爲賢者効力. (九百五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Orang yang takutkan isteri-nya tidak akan berani melakukan kebaik- an walau pun kapada orang yang mulia.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
아내를두려워하는자는유덕한자들에게선행하는것을항상근심하리라. (九百五)

உருசிய (Русский)
Трепещущий перед своей женой не совершит деяний, восхваляемых мудрецами

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يخاف من زوجته لن يجد فيه شهامة لأداء واجباته حتى عند الفضلاء (٩٠٥)


பிரெஞ்சு (Français)
Qui craint sa femme craindra toujours d'obliger les bonnes gens, avec son pécule qu'il aura cependant gagné lui-même.

ஜெர்மன் (Deutsch)
Wer sich vor seiner Frau fürchtet, fürchtet sich immer, Guten Gutes zu tun.

சுவீடிய (Svenska)
Den som fruktar sin hustru kommer alltid att ängslas också för att göra något gott mot goda män.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui uxorem timeat, semper timebit bonis bene facere. (CMV)

போலிய (Polski)
Ten, co boi się żony, zapomni niedługo Jaką ongiś zamierzał pójść drogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22