பெரியாரைப் பிழையாமை

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.   (௮௱௯௰௪ - 894) 

மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு, கைகாட்டி அழைப்பதைப் போலாகும்  (௮௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.  (௮௱௯௰௪)
— மு. வரதராசன்


அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.  (௮௱௯௰௪)
— சாலமன் பாப்பையா


எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்  (௮௱௯௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀽𑀶𑁆𑀶𑀢𑁆𑀢𑁃𑀓𑁆 𑀓𑁃𑀬𑀸𑀮𑁆 𑀯𑀺𑀴𑀺𑀢𑁆𑀢𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀆𑀶𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀆𑀶𑁆𑀶𑀸𑀢𑀸𑀭𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁙𑁤𑁣𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku
Aatraadhaar Innaa Seyal
— (Transliteration)


kūṟṟattaik kaiyāl viḷittaṟṟāl āṟṟuvārkku
āṟṟātār iṉṉā ceyal.
— (Transliteration)


For the weak to challenge the mighty Is to summon yama with the hand.

ஹிந்தி (हिन्दी)
करना जो असमर्थ का, समर्थ का नुक़सान ।
है वह यम को हाथ से, करना ज्यों आह्‍वान ॥ (८९४)


தெலுங்கு (తెలుగు)
ఆర్యులైన వారి కవమాన మొనరింప
తట్టి లేపినట్టు దండధరుని. (౮౯౪)


மலையாளம் (മലയാളം)
ശക്തരായ ജനത്തോടങ്ങെതിരായ് തിന്മചെയ്യുകിൽ യമനെത്തന്നിലേക്കായി ക്ഷനിക്കുന്നത് പോലെയാം (൮൱൯൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬಲ್ಲಿದರಾದವರಿಗೆ, ಅಶಕ್ತರಾದವರು ಕೆಟ್ಟದ್ದನ್ನು ಮಾಡಿದರೆ, ತಾವೇ ಕೈಯಾರೆ, ಮೃತ್ಯುವನ್ನು ಆಹ್ವಾನಿಸಿದಂತೆ. (೮೯೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
समं बलवता वैरं क्रियते यद्धि दुर्बलै: ।
हन्तुर्यमस्य हस्ताभ्यामाह्वानसदृशं हि तत् ॥ (८९४)


சிங்களம் (සිංහල)
බලය නැති ඇත්තන් - දුක් දීම බලවතූනට අත වනා යමයා - හනික කැඳවීමට සමානයි (𑇨𑇳𑇲𑇤)

சீனம் (汉语)
弱小之人, 欲侵凌權貴者, 取死有道矣. (八百九十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah orang lemah yang menyakitkan mereka yang gagah per- kasa: apa yang di-lakukan-nya ada-lah saperti memanggil Dewa Maut sendiri supaya datang kapada-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
강대한자에게도전하는약자는죽음과파멸의신을초대하는것과같다. (八百九十四)

உருசிய (Русский)
Если слабый оскорбляет своими деяниями властелина,,о он собственной рукой зовет к себе бога смерти

அரபு (العَرَبِيَّة)
أنظر إلى الرجل الضعيف الذى يؤذى أصحاب القوة والسلطة مثله كمثل من يتصل بـ "يما" إله الموت – ويقرب إليه برضاء نفسه (٨٩٤)


பிரெஞ்சு (Français)
Si le faible offense le puissant, il fait signe de la main à Yamen (dieu de la Mort qui vient de lui-même), de venir à lui

ஜெர்மன் (Deutsch)
Verlern der Unfähige den Fähigen, gleitht dies dem Anrufen des Todesguttes mit Zuwinken.

சுவீடிய (Svenska)
När den svage förorättar den starkeär det som om han vinkade Dödsguden till sig.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si impotens potenti male faciat , idem erit ac si deum mortis (nutu) manus ad se vocet. (DCCCXCIV)

போலிய (Polski)
Nie na miarę cherlaka jest drażnić silnego, Który krzywdę mu może uczynić.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எமனை அழைத்தவன் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

தன் வழியே போய்க் கொண்டிருக்கும் எமனைப் பார்த்து ஒருவன் கையைத் தட்டி அழைத்தால் என்ன ஆகும்?

எமன் வந்து, அழைத்தவரின் உயிரைப் பிடித்துக் கொண்டு போய்விடுகிறான்.

வந்த எமன் வெறும் கையோடு போவானா? போகான்.

அதுபோல, மிகுந்த வல்லமை வாய்ந்த ஒருவனுக்கு வலிமை இல்லாதவன் தீமை செய்தால், தனக்குத் தானே தீங்கை தேடிக் கொள்வது போலாகும்.

அதாவது, தீமை செய்தவனை, வல்லமை வாய்ந்தவன் அழித்தே தீருவான்.

தன்னுடைய ஆற்றல் எத்தகையது? பிறருடைய ஆற்றல் எப்படிப்பட்டது? என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.


கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22