பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.   (௮௱௯௰௧ - 891) 

மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது; அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம், மிகச் சிறந்தது ஆகும்  (௮௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.  (௮௱௯௰௧)
— மு. வரதராசன்


எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.  (௮௱௯௰௧)
— சாலமன் பாப்பையா


ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்  (௮௱௯௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀶𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑁆 𑀆𑀶𑁆𑀶𑀮𑁆 𑀇𑀓𑀵𑀸𑀫𑁃 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀮𑀼𑀴𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀢𑀮𑁃 (𑁙𑁤𑁣𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aatruvaar Aatral Ikazhaamai Potruvaar
Potralul Ellaam Thalai
— (Transliteration)


āṟṟuvār āṟṟal ikaḻāmai pōṟṟuvār
pōṟṟaluḷ ellām talai.
— (Transliteration)


The best way to guard oneself is to not spite The powers of the prowess.

ஹிந்தி (हिन्दी)
सक्षम की करना नहीं, क्षमता का अपमान ।
रक्षा हित जो कार्य हैं, उनमें यही महान ॥ (८९१)


தெலுங்கு (తెలుగు)
నిందఁ జేయకున్న నియతాత్ములను జూచి
క్షేమ మంతకన్నఁ జెప్పలేము. (౮౯౧)


மலையாளம் (മലയാളം)
മുൻകടന്ന മഹാന്മാരെയികഴ്ത്താതെയിരിക്കുകിൽ ഭാവിയിൽ പഴിയേൽക്കാതെ കഴിക്കാനുള്ള കാവലാം (൮൱൯൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಮರ್ಥರ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ತೆಗಳದಿರುವುದೇ ತಮ್ಮನ್ನು ಕೇಡಿನಿಂದ ಕಾಯ್ದುಕೊಳ್ಳುವ ಕಾವಲಲ್ಲಿ ಹಿರಿದೆನಿಸುತ್ತದೆ. (೮೯೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
आत्मरक्षासाधनेषु श्रेष्ठं तत् तु प्रकीर्त्यते ।
यत्कार्यसाधनपटो: सामर्थ्यस्य परिग्रह: ॥ (८९१)


சிங்களம் (සිංහල)
මහතූන් ගේ බලය - පහත් කොට නො සිතයි නම් හැම රැකූමකට වැඩි - රැකෙනවුන් ගේ උසස් රැකූමයි (𑇨𑇳𑇲𑇡)

சீனம் (汉语)
不觸怒權貴, 乃自保之首務. (八百九十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perhatian yang paling besar yang harus di-tumpukan oleh sa-saorang untok keselamatan-nya sendiri ia-lah menjaga diri-nya sa-chermat mungkin daripada melukakan hati mereka yang boleh melakukan apa sahaja.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
강대한자의세력을위반하지않는것은모든해악에대한최고방어이다. (八百九十一)

உருசிய (Русский)
Если ты заботишься о себе, то должен заботиться об уважении к могуществу властелина

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يطلب لنفسه أمنا لا بـد أن يتخفظ نفسه من إزعاج الكبراء الذين يتمكنون على فعل كل شيئ (٨٩١)


பிரெஞ்சு (Français)
Le premier de tous les soins pour se protéger contre les maux, c'est de ne pas mépriser le pouvoir de ceux qui peuvent faire aboutir les entreprises.

ஜெர்மன் (Deutsch)
Die Stärke der Tatkräftigen nicht zu verachten ist der sicherste Schutz vor Übeln.

சுவீடிய (Svenska)
Det bästa skydd för dem som önskar skydda sig är att icke tala nedsättande om de mäktigas makt.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Potentiam poteutium non despicere, omnis cautionis caventium est caput. (DCCCXCI)

போலிய (Polski)
Nie trza drażnić silniejszych, to kwestia istnienia. Własny instynkt ci to podpowiada.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22