உட்பகை

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.   (௮௱௮௰௮ - 888) 

முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்  (௮௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.  (௮௱௮௰௮)
— மு. வரதராசன்


அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.  (௮௱௮௰௮)
— சாலமன் பாப்பையா


அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்  (௮௱௮௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀢 𑀧𑁄𑁆𑀷𑁆𑀧𑁄𑀮𑀢𑁆 𑀢𑁂𑀬𑀼𑀫𑁆 𑀉𑀭𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀢𑀼
𑀉𑀝𑁆𑀧𑀓𑁃 𑀉𑀶𑁆𑀶 𑀓𑀼𑀝𑀺 (𑁙𑁤𑁢𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aramporudha Ponpolath Theyum Uramporudhu
Utpakai Utra Kuti
— (Transliteration)


aramporuta poṉpōlat tēyum uramporutu
uṭpakai uṟṟa kuṭi.
— (Transliteration)


A family with internal frictions wears out And loses its strength like gold being filed.

ஹிந்தி (हिन्दी)
रेती से घिस कर यथा, लोहा होता क्षीण ।
गृह भी अन्तवैंर से, होता है बलहीन ॥ (८८८)


தெலுங்கு (తెలుగు)
ఆకురాయి యినుము నరగదీనెడి మాడ్కి
పాడుబడును గృహము బంధుపగళు. (౮౮౮)


மலையாளம் (മലയാളം)
പകയുൾക്കൊണ്ട ഗേഹത്തിൽ പഴകിയ പ്രതാപങ്ങൾ തേഞ്ഞുനിഷ്പ്രഭമായിടുമയസ്സിന്നരമേറ്റപോൽ (൮൱൮൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಳಹಗೆಯುಂಟಾದ ಸಂಸಾರವು ಅರದಿಂದ ತೇಯಲ್ಮಟ್ಟ ಕಬ್ಬಿಣದಂತೆ ಬಲವನ್ನು ಕಿಳಿದುಕೊಂಡು ದುರ್ಬಲವಾಗುತ್ತದೆ. (೮೮೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अन्तर्विरोधिनां वंशो बलहीन: क्रमाद् भवेत् ।
अय:पिण्ड: कृपाणेन घृष्टो नाशं व्रजेद्यथा ॥ (८८८)


சிங்களம் (සිංහල)
බල නැති තූළ සතූරු - කමටම යට වුනා වූ යහ ගූණැති පවුලද - පීරි ගැ රන් මෙන් ගෙවියයි (𑇨𑇳𑇱𑇨)

சீனம் (汉语)
一家人相叛離者, 力之分散, 有如黃金爲鐡銼所碎也. (八百八十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah rumah yang menyimpan pengkhianat di-dalam-nya: ia akan hanchor menjadi debu saperti besi yang di-geser kikir.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
내부에적개심이발생할때,가족의장점은무너지는철처럼마멸되리라. (八百八十八)

உருசிய (Русский)
Семейство, где поселилась вражда, превращается в прах, как железо, истачиваемое напильником,

அரபு (العَرَبِيَّة)
البيت الذى يأوى إليه الخائن من دجاخله يتكسر ويتقطع ذلك البنيت ويصير عبارا كمثل قضيب الحديد يوضع فى النار ثم يضرب عليه بالمطرقة (٨٨٨)


பிரெஞ்சு (Français)
La famille en proie à l'inimitié intestine sera détruite, comme le fer qui est réduit en poussière par la lime.

ஜெர்மன் (Deutsch)
Die Stärke einer in sich verfeindeten Familie wird abgenutzt wie Gold, das mit der Feile bearbeitet wird.

சுவீடிய (Svenska)
En familj där splittring råder får sin kraft förödd liksom järnet nöts av filen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ut aurum Jima impugnatum, ita in domo interni odii plcua vires (interno odio) impuguatae se couteruut (DCCCLXXXVIII)

போலிய (Polski)
Wszelkie złote ozdoby już z niej wydrążyli. Kosztowności tam składać nie warto.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறிது பெரிதாக வளரும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அரத்தைக் கொண்டு அராவப்பட்ட இரும்பானது தேய்கிறது; துண்டிக்கப்படுகிறது.

அரமும் இரும்பு; துண்டிக்கபடுவதும் இரும்பு தான். எனினும் பல மடங்கு வலிமை உடைய பெரிய இரும்பைச் சிறிய இரும்பான அரம் அராவி அராவி அறித்துவிடுகிறது.

அதுபோல, ஒற்றுமையோடு வாழும் பெரிய குடும்பத்தில் சிறிது உட்பகை தோன்றுமானால் அது பெரிதாக வளர்ந்து அந்த குடும்பத்தின் ஒற்றுமையை குலைத்து, அழித்துவிடும்.

(உட்பகை காரணமாக வரலாறு வரலாறு, சகோதர- சகோதரிகள், கணவன்- மனைவி, உறவினர், பெற்றோர், பிள்ளைகள் முதலானோர் சச்சரவிட்டு, நீதிமன்றங்கள் சென்று அழிந்தவர் பலர்)


அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22