உட்பகை

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.   (௮௱௮௰௫ - 885) 

புறத்தே உறவு முறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அ·து, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும்  (௮௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.  (௮௱௮௰௫)
— மு. வரதராசன்


உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.  (௮௱௮௰௫)
— சாலமன் பாப்பையா


நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்  (௮௱௮௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑀮𑁆𑀫𑀼𑀶𑁃𑀬𑀸𑀷𑁆 𑀉𑀝𑁆𑀧𑀓𑁃 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺𑀷𑁆 𑀇𑀶𑀮𑁆𑀫𑀼𑀶𑁃𑀬𑀸𑀷𑁆
𑀏𑀢𑀫𑁆 𑀧𑀮𑀯𑀼𑀫𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁢𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan
Edham Palavum Tharum
— (Transliteration)


uṟalmuṟaiyāṉ uṭpakai tōṉṟiṉ iṟalmuṟaiyāṉ
ētam palavum tarum.
— (Transliteration)


Hidden hatred amongst kinsman Can cause all sorts of deadly sorrows.

ஹிந்தி (हिन्दी)
यदि होता बन्धुत्व में, कोई अन्तवैंर ।
मृत्युजनक जो सो कई, करता है वह गैर ॥ (८८५)


தெலுங்கு (తెలుగు)
చూడ చుట్టమయ్యు కీడెంచువాఁడున్న
వాని వలన వచ్చు ప్రాణహాని. (౮౮౫)


மலையாளம் (മലയാളം)
ഒരുത്തൻ സ്നേഹഭാവത്തിലുള്ളിൽ പകയൊതുക്കുകിൽ മൃതിവന്നുഭവിപ്പോളം പാപങ്ങൾക്കിടയാക്കിടും (൮൱൮൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
(ದೊರೆಯಾದವನಿಗೆ) ತನ್ನ ಸಂಬಂಧದವರಲ್ಲಿಯೇ ಬಳಹಗೆಯು ಕಾಣಿಸಿಕೊಂಡರೆ, ಅಳಿವು ತರುವಂಥ ಹಲವು ದುಃಖಗಳನ್ನು ಉಂಟುಮಾಡುತ್ತದೆ. (೮೮೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
बान्धव्यमूलकं गूढवैरं भवेद्यदि: ।
मरणान्तानि दु:खानि लभते तत एव स: ॥ (८८५)


சிங்களம் (සිංහල)
නෑ සියන් අතරම - සැඟවී ඇති සතූරුකම මරණය තෙක් විපත් - බොහෝ කොට සිදුවන්ට ගේතූයි (𑇨𑇳𑇱𑇥)

சீனம் (汉语)
有親屬爲叛逆, 將陷人於惡境而危及人之生命. (八百八十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apabila sa-orang keluarga bertukar menjadi pengkhianat terhadap- mu, dia akan membawa berbagai2 durjana malah membahayakan nyawa-mu sendiri.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
친척들사이에숨은반목은파괴를통해치명적인실책을많이초래한다. (八百八十五)

உருசிய (Русский)
Если в твоем стане среди близких возникает вражда, это приведет тебя к гибели

அரபு (العَرَبِيَّة)
إن ينقلب أحد من أقرباءك خائنا ضدك سيسبب لك بليات كثيرة ويقطع حبل حياتك (٨٨٥)


பிரெஞ்சு (Français)
Si (le Roi) a des parents dont la haine est cachée sous une apparence affectueuse, ils lui causeront une multitude de maux mortels.

ஜெர்மன் (Deutsch)
Das Aufkommen einer inneren Feindschaft unter Angehörigen führt zu vielen tödlichen Vergehen.

சுவீடிய (Svenska)
Om inre fiendskap råder i det fördolda åsamkar den mycken olycka och dödligt fördärv.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si specie cognationis internus hostis oriatur , specie corruptionis multum damni afferet. (DCCCLXXXV)

போலிய (Polski)
Wiele nieszczęść spaść może na króla, jeżeli Jego krewni zaprószą pogorzel.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22