பகைமாட்சி

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.   (௮௱௬௰௩ - 863) 

அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்  (௮௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.  (௮௱௬௰௩)
— மு. வரதராசன்


பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.  (௮௱௬௰௩)
— சாலமன் பாப்பையா


அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்  (௮௱௬௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀜𑁆𑀘𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀬𑀸𑀷𑁆 𑀅𑀫𑁃𑀯𑀺𑀮𑀷𑁆 𑀈𑀓𑀮𑀸𑀷𑁆
𑀢𑀜𑁆𑀘𑀫𑁆 𑀏𑁆𑀴𑀺𑀬𑀷𑁆 𑀧𑀓𑁃𑀓𑁆𑀓𑀼 (𑁙𑁤𑁠𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Anjum Ariyaan Amaivilan Eekalaan
Thanjam Eliyan Pakaikku
— (Transliteration)


añcum aṟiyāṉ amaivilaṉ īkalāṉ
tañcam eḷiyaṉ pakaikku.
— (Transliteration)


A coward, ignorant, unsocial and mean Is an easy prey to his enemy.

ஹிந்தி (हिन्दी)
अनमिल है कंजूस है, कायर और अजान ।
उसपर जय पाना रहा, रिपु को अति आसान ॥ (८६३)


தெலுங்கு (తెలుగు)
దానహీను, బుద్ధిహీను నిర్ధాక్షిణ్య
గెలువ సులభ మెట్టి బలములేక. (౮౬౩)


மலையாளம் (മലയാളം)
ഭീരുവുമജ്ഞനും പരിഷ്ക്കാരശൂന്യനുമായവൻ ലോഭിയും കൂടിയാണെങ്കിൽ പകയർക്കെളുതായിടും (൮൱൬൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನು ಅಂಜುಬುರುಕನಾಗಿ, ತಿಳಿವಳಿಕೆ ಇಲ್ಲದವನಾಗಿ, ಹೊಂದಿಕೊಂಡು ಹೋಗುವ ಗುಣವಿಲ್ಲದವನಾಗಿ, ಕೊಡುವ ಧಾರಾಳತೆ ಇಲ್ಲದವನಾಗಿದ್ದರೆ, ಅವನು ಹಗೆಗಳಿಗೆ ಸುಲಭನೂ ಸದರನೂ ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾನೆ. (೮೬೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
भेतव्ये भयहीनस्य ज्ञातव्यं चाप्यजानत: ।
अदातुर्मित्रहीनस्य सुलभा शत्रुवश्यता ॥ (८६३)


சிங்களம் (සිංහල)
නො තැන බිය ලෝබය - නො ඇසුරත්වය නො දැනුම මෙ ගූණයන්ගෙන් පිරි - දනෝ සතූරන් හමුවෙ දුබල ය (𑇨𑇳𑇯𑇣)

சீனம் (汉语)
怯懦, 疏忽, 倉皇, 郢吝之辈, 敵人易乘之矣. (八百六十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ada raja yang tidak mempunyai keberanian atau pengertian mahu pun kemurahan hati, yang tidak pula mahu hidup aman dengan jiran2-nya: ia mangsa mudah bagi musoh.2-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
내성적이고, 무지하며, 교제를싫어하는인색한자는적에게쉽게패배한다. (八百六十三)

உருசிய (Русский)
Преисполненный враждебности легко попадает в объятия ненависти,,ем более, если он не любит близких и не ведает знаний

அரபு (العَرَبِيَّة)
الملك الذى لا يجد فيه شهامة ولا قوة ولا يعيش فى أمن واطمينان مع جيرانه سيصير فريسة لاعداءه بكل يسر و سهولة (٨٦٣)


பிரெஞ்சு (Français)
Voici (un prince) qui est poltron, ignorant, qui ne vit pas en paix (avec ses voisins) et qui est avare. Il est la proie facile de ses ennemis.

ஜெர்மன் (Deutsch)
Wer zaghaft ist, unwissend, nicht umgänglich und gejzig, ist eine leichte Beute für seine Feinde.

சுவீடிய (Svenska)
Feg, okunnig, motstridig och snål är han - ett lätt byte för sina fiender.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui sit metuens , in sci us, dissociabilis, aegre largiens, hostibus facillimum praebet negotium .. (DCCCLXIII)

போலிய (Polski)
Król tchórzliwy, ignorant i skąpiec na tronie, Jeśli przy tym dość sił nie posiada,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22