கூடா நட்பு

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.   (௮௱௨௰௫ - 825) 

மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை, எந்த ஒருவகையாலும், அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது  (௮௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.  (௮௱௨௰௫)
— மு. வரதராசன்


மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.  (௮௱௨௰௫)
— சாலமன் பாப்பையா


மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது  (௮௱௨௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀅𑀫𑁃𑀬𑀸 𑀢𑀯𑀭𑁃 𑀏𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀷𑀸𑀮𑁆 𑀢𑁂𑀶𑀶𑁆𑀧𑀸𑀶𑁆𑀶𑀼 𑀅𑀷𑁆𑀶𑀼 (𑁙𑁤𑁜𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Manaththin Amaiyaa Thavarai Enaiththondrum
Sollinaal Therarpaatru Andru
— (Transliteration)


maṉattiṉ amaiyā tavarai eṉaittoṉṟum
colliṉāl tēṟaṟpāṟṟu aṉṟu.
— (Transliteration)


Trust not the mere words of those Whose minds don't agree with us.

ஹிந்தி (हिन्दी)
जिससे मन मिलता नहीं, उसका सुन वच मात्र ।
किसी विषय में मत समझ, उसे भरोसा पात्र ॥ (८२५)


தெலுங்கு (తెలుగు)
చిత్త మత్తుకొనని చెలికాని మాటలు
నిర్ణయింపరాదు నిజమటుంచు. (౮౨౫)


மலையாளம் (മലയാളം)
മനപ്പൊരുത്തമില്ലാതെ പഴകുന്ന ജനങ്ങളിൽ ചൊല്ലുകൾ പൂർണ്ണമായ് നമ്പിത്തുനിഞ്ഞീടരുതൊന്നിനും (൮൱൨൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತಮ್ಮೊಡನೆ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಹೊಂದಾಣಿಕೆ ಇಲ್ಲದವರ ಯಾವೊಂದು ಮಾತಿನಲ್ಲೂ ವಿಶ್ವಾಸವಿಡಕೂಡದು. (೮೨೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कृत्वान्यभावं मनसि स्नेहमाचरतो बहि: ।
श्रुत्वा वार्तां च कार्येषु प्रवृत्तिर्न वरा मता ॥ (८२५)


சிங்களம் (සිංහල)
සිත එකඟ නොමැතී - දුදනන් කවර කලෙකක් තෙපලන ලද වදන් - අනුව තේරුම් ගැනුම අපහසු (𑇨𑇳𑇫𑇥)

சீனம் (汉语)
心與汝不和者, 縱作甘言, 亦莫信之. (八百二十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Awasi-lah orang yang hati-nya tiada bersama-mu: walau pun kata2- nya akan memikat-mu, usah-lah letakkan sa-barang keperchayaan kapada-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
마음이동일하지않은자의말은신뢰하지않아야한다. (八百二十五)

உருசிய (Русский)
Не верь друзьям лицемерным, душа которых отвращена от тебя, но слова которых полны притворной любви

அரபு (العَرَبِيَّة)
إن الذين ليست قلوبهم معك لا تعتقد فى صلاحهم بأدنى درجة مع أن كلماتهم تجذب قلبك إليهم (٨٢٥)


பிரெஞ்சு (Français)
La morale défend de vous lier d'amité avec ceux dont le cœur ne bat pas à l'unisson avec le vôtre, mais qui disent seulement de bonnes paroles.

ஜெர்மன் (Deutsch)
Man soll solchen überhaupt nicht trauen, die keine Liebe im Herzen haben.

சுவீடிய (Svenska)
Icke i någon sak må man ta dem på orden som är opålitliga i sitt hjärta.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui intus tecum non conjuncti sint, eorum verbis vel minimum confidere, non justum est. (DCCCXXV)

போலிய (Polski)
Bardzo trudno jest trafić do serca nędznika, Kiedy z góry odrzuca twe słowa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22