தீ நட்பு

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.   (௮௱௰௭ - 817) 

வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே, பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்  (௮௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.  (௮௱௰௭)
— மு. வரதராசன்


சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.  (௮௱௰௭)
— சாலமன் பாப்பையா


சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்  (௮௱௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀓𑁃𑀯𑀓𑁃𑀬 𑀭𑀸𑀓𑀺𑀬 𑀦𑀝𑁆𑀧𑀺𑀷𑁆 𑀧𑀓𑁃𑀯𑀭𑀸𑀮𑁆
𑀧𑀢𑁆𑀢𑀝𑀼𑀢𑁆𑀢 𑀓𑁄𑀝𑀺 𑀉𑀶𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁛𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal
Paththatuththa Koti Urum
— (Transliteration)


nakaivakaiya rākiya naṭpiṉ pakaivarāl
pattaṭutta kōṭi uṟum.
— (Transliteration)


Ten million times better the enmity of foes Than the friendship of jesters and fools.

ஹிந்தி (हिन्दी)
हास्य-रसिक की मित्रता, करने से भी प्राप्त ।
भले बनें दस कोटि गुण, रिपु से जो हों प्राप्त ॥ (८१७)


தெலுங்கு (తెలుగు)
మాట మైత్రికన్న కోటికి లాభమ్ము
శత్రువులుగనుండి సలుపు చెడుపు. (౮౧౭)


மலையாளம் (മലയാളം)
കപടസ്നേഹത്തിൽ നിന്നും നന്മകൾ ലഭ്യമായിടാം പത്തുകോടിയിരട്ടിക്കും ശത്രുവാലുള്ള നന്മകൾ (൮൱൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಪ್ರೇಮವಿಲ್ಲದೆ, ನಗಿಸಿ ಕಾಲ ಕಳೆಯುವವರ ಸ್ನೇಹದಲ್ಲಿ ಪಡೆದುಕೊಳ್ಳುವ ಪ್ರಯೋಜನಕ್ಕಿಂತ ಹಗೆಗಳಿಂದ ಬರುವ ಲಾಭ ಹತ್ತು ಕೋಟಿ ಪಾಲು ಮೇಲು. (೮೧೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
वहिर्हास्यपरै: साकं मैत्र्यां यज्जायते सुखम् ।
रिपुमूलसुखं तस्मात् दशकोटिगुणाधिकम् ॥ (८१७)


சிங்களம் (සිංහල)
සිනාවෙන් පමණක් - මිතූරුව ලබන සතූටට වඩා සතූරන් ගෙන් - හොඳයි ලද දුක් කෝටි ගණනින් (𑇨𑇳𑇪𑇧)

சீனம் (汉语)
仇視敵對, 猶遠勝於饀媚. (八百十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kebenchian seteru sa-ratus juga kali baik-nya daripada persahabatan dengan teman yang hanya berjenaka dan suka mengambil muka.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
가장하는자의우정보다적의증오를간직하는편이훨씬낫다. (八百十七)

உருசிய (Русский)
В миллионы раз лучше ненависть врага, чем дружба людей, совершенно равнодушных к тебе

அரபு (العَرَبِيَّة)
نفرة الأعداء وكرههم أحسن وأكبر من صداقة الندماء المتلقين بمائة ألف ألف ألف ضعف (٨١٧)


பிரெஞ்சு (Français)
Les maux occasionnés par la haine des ennemis sont cent millions de fois préférables aux jouissances procurées par -les compagnons débauche et les danseurs sur perche.

ஜெர்மன் (Deutsch)
Feinde bringen weit mehr ein als Freundschaft mit Spöttern.

சுவீடிய (Svenska)
Miljontals gånger bättre är det som kommer från ens fiender än från vänskap med löjeväckande människor.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Decies centies millies majora ab hostibus, quam ex amicitia eorum, qui (tantummodo) risum moveaut. (DCCCXVII)

போலிய (Polski)
Niech cię wróg nienawidzi, byle by jedynie Nie ośmieszał cię druh byle jaki.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22