நட்பாராய்தல்

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.   (௭௱௯௰௫ - 795) 

நாம் தவறு செய்யும் பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும்  (௭௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.  (௭௱௯௰௫)
— மு. வரதராசன்


நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.  (௭௱௯௰௫)
— சாலமன் பாப்பையா


தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்  (௭௱௯௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀵𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺 𑀅𑀮𑁆𑀮𑀢𑀼 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼 𑀯𑀵𑀓𑁆𑀓𑀶𑀺𑀬
𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀦𑀝𑀧𑀼 𑀆𑀬𑁆𑀦𑁆𑀢𑀼 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁘𑁤𑁣𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Azhachcholli Alladhu Itiththu Vazhakkariya
Vallaarnatapu Aaindhu Kolal
— (Transliteration)


aḻaccolli allatu iṭittu vaḻakkaṟiya
vallārnaṭapu āyntu koḷal.
— (Transliteration)


Seek a friend who will make you cry, Rail and rate when you go astray.

ஹிந்தி (हिन्दी)
झिड़की दे कर या रुला, समझावे व्यवहार ।
ऐसे समर्थ को परख, मैत्री कर स्वीकार ॥ (७९५)


தெலுங்கு (తెలుగు)
దుఃఖ పడఁగ జెప్పి దోషమ్ము ఖండిచి
మార్గ దర్శకమగు మైత్రి గొనుము. (౭౯౫)


மலையாளம் (മലയാളം)
വഴിതെറ്റി നടക്കുമ്പോൾ ശാസിച്ചു വഴിമാറ്റുവാൻ പ്രാപ്‌തിയുള്ളവനെത്തേടിപ്പിടിച്ചു മിത്രമാക്കണം (൭൱൯൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಲೋಕಾಚಾರವಲ್ಲದ ಕೆಲಸವನ್ನು ಮಾಡೀದಾಗ ಪಶ್ಚಾತ್ತಾಪ ಪಡುವಂತೆ ನಿಂದಿಸಿ ಹೇಳುವ, ಲೋಕದ ನಡೆಯನ್ನು ಅರಿಯುವಂತೆ ಮಾಡುವ ಸ್ನೇಹವನ್ನು ಶೋಧಿಸಿ ಪಡೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೭೯೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कटुवाक्यं प्रयुज्यापि दुर्मार्गाद् यो निवारयेत् ।
लोकज्ञानवता तेन विमृश्य स्नेहमाचर ॥ (७९५)


சிங்களம் (සිංහල)
වරදක් දුටුව තැන - ඇඩවීමෙන් ඔවා දෙන නීති දත් බලවත් - අය සොයා සෙනෙහස බදිනු යුතූ (𑇧𑇳𑇲𑇥)

சீனம் (汉语)
人能矯正一己之過失者, 俦慮而結交之. (七百九十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Chari-lah mereka yang tahu chara2 orang yang bijaksana dan yang boleh memarah dan membetulkan kamu bila tersesat: dan jadikan- lah mereka kawan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
잘못을지적하고, 비난하며정도를제시하는훌륭한친구를구해야한다. (七百九十五)

உருசிய (Русский)
Испытай человека, а затем заводи дружбу с ним,,меющим владеть словом, говорящим тебе правду.

அரபு (العَرَبِيَّة)
أنظر إلى الذين يعرفون سبيل الصدق والصواب ويلومونك ويوبخونك عند ما تضل ذاك السبل فاتخذ منهم لك صديقا (٧٩٥)


பிரெஞ்சு (Français)
Rechercher après examen, l'amitié de celui qui a le talent de voos faire regretter la pensée d'un acte contraire aux usages du monde, de vous blâmer si vous l'avez commis et de vous engager à tenir une conduite conforme (aux usages du monde).

ஜெர்மன் (Deutsch)
Prüfe und befreunde dich mit solchen, die selbst unter Tränen raten können, falsches Handeln tadeln und auf den rechten Weg führen.

சுவீடிய (Svenska)
Deras vänskap må man eftersträva vilkas förebråelser får ens ögon att tåras och som förmår visa den rätta vägen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui lacrimas movcns et in injuriam increpans, quae cum more con- veniant, possit exponere, cligens amicum facias (DCCXCV)

போலிய (Polski)
Druh prawdziwy, gdy trzeba, potrafi przyganiać Nawet bardzo dostojnej osobie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22