படைச்செருக்கு

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.   (௭௱௮௰ - 780) 

தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும்  (௭௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.  (௭௱௮௰)
— மு. வரதராசன்


வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.  (௭௱௮௰)
— சாலமன் பாப்பையா


தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு  (௭௱௮௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀭𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀦𑀻𑀭𑁆𑀫𑀮𑁆𑀓𑀘𑁆 𑀘𑀸𑀓𑀺𑀶𑁆𑀧𑀺𑀷𑁆 𑀘𑀸𑀓𑁆𑀓𑀸𑀝𑀼
𑀇𑀭𑀦𑁆𑀢𑀼𑀓𑁄𑀴𑁆 𑀢𑀓𑁆𑀓𑀢𑀼 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁘𑁤𑁢)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Purandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu
Irandhukol Thakkadhu Utaiththu
— (Transliteration)


purantārkaṇ nīrmalkac cākiṟpiṉ cākkāṭu
irantukōḷ takkatu uṭaittu.
— (Transliteration)


If death lies in glory that draws tears from the ruler, It is worth seeking even in alms.

ஹிந்தி (हिन्दी)
दृग भर आये भूप के, सुन जिसका देहांत ।
ग्रहण योग्य है माँग कर, उसका जैसा अंत ॥ (७८०)


தெலுங்கு (తెలుగు)
చావుఁ గోరుకొనును సామ్రాట్టు కన్నుల
నీరు గారునట్లు వీరవరుఁడు. (౭౮౦)


மலையாளம் (മലയാളം)
രക്ഷകൻ നായകൻ ബാഷ്‌പമൂറുമാറ് മരിക്കുകിൽ ‍ ശ്രേഷ്‌ഠമപ്പോൽ മരിക്കാനായ് ജീവൻ‍ കടമെടുക്കണം‍ (൭൱൮൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪೂರೆಯುವ ಅರಸರ ಕಣ್ಣುಗಳು ಕಂಬನಿಯಿಂದ ತುಂಬುವಂತೆ (ಯುದ್ಧದಲ್ಲಿ) ಸಾವನ್ನಪ್ಪುವುದಾದರೆ, ಅಂಥ ಸಾವನ್ನು ಭಿಕ್ಷೆಯೆತ್ತಿಯಾದರೂ ಪಡೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೭೮೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स्वीयं भूपं चाश्रुपातपर्वकं शेदयन् भट: ।
मृतश्चत् प्रार्थनापूर्वं मृतिनूनमवाप्यताम् ॥ (७८०)


சிங்களம் (සිංහල)
නායක නෙත කඳුලු - පුරවා මළොත් සෙබළෙක් එබඳු වූ මරණය - ගැනුම අනගියි වටියි නම්බුයි (𑇧𑇳𑇱)

சீனம் (汉语)
戰士死於光榮, 使主帥爲之下淚者, 不虛其死矣. (七百八十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Sa-kira-nya dapat sa-saorang mati sa-hingga mungkin menchuchor- kan ayer mata ketua-nya, maka sa-sunggoh-nya bahagia-lah kalau dapat memohon di-berikan kematian yang saperti itu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
통치자의애통을부르는죽음은진정한병사들에게가장환영받는것이다. (七百八十)

உருசிய (Русский)
Если воин погибает на поле сражения, вызывая слезы царя,,о такая гибель достойна того, чтобы ее вымаливать

அரபு (العَرَبِيَّة)
إن يمت احد فى حالة تدمع عينى قائده يتمنى الآخرون أن يموتوا بمثل موته (٧٨٠)


பிரெஞ்சு (Français)
La mort de celui qui s'est battu, de manière à faire venir les larmes aux yeux du Roi qui l'a comblé de ses bienfaits, mérite d'être obtenue, même en mendiant.

ஜெர்மன் (Deutsch)
Rührt einer beim Fallen seinen Anführer zu Tränen, wäre es besser, den Tud durch Betteln gewonnen zu haben.

சுவீடிய (Svenska)
Att genom sin död i striden få tårar att strömma ur konungens ögon - sådan död vore värd att bedja om.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ita mori , ut rex lacrimas effundat, etiamsi precibus impetrandum sit, desiderari debet, (DCCLXXX)

போலிய (Polski)
Wojownicy, sięgajcie po śmierć i wawrzyny, Aby wódz wasz zapłakał nad wami!
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22