படைச்செருக்கு

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.   (௭௱௭௰௭ - 777) 

உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்  (௭௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.  (௭௱௭௰௭)
— மு. வரதராசன்


தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.  (௭௱௭௰௭)
— சாலமன் பாப்பையா


சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்  (௭௱௭௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀼𑀵𑀮𑀼𑀫𑁆 𑀇𑀘𑁃𑀯𑁂𑀡𑁆𑀝𑀺 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀉𑀬𑀺𑀭𑀸𑀭𑁆
𑀓𑀵𑀮𑁆𑀬𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀸𑀭𑀺𑀓𑁃 𑀦𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 (𑁘𑁤𑁡𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Suzhalum Isaiventi Ventaa Uyiraar
Kazhalyaappuk Kaarikai Neerththu
— (Transliteration)


cuḻalum icaivēṇṭi vēṇṭā uyirār
kaḻalyāppuk kārikai nīrttu.
— (Transliteration)


That hero, who gives up his life for fame, Is worthy of being adorned with the anklet.

ஹிந்தி (हिन्दी)
जग व्यापी यश चाहते, प्राणों की नहिं चाह ।
ऐसों का धरना कड़ा, शोभाकर है, वाह ॥ (७७७)


தெலுங்கு (తెలుగు)
వీర కంకణమ్ము విభునిచే బడయంగ
ప్రాణమీయ వీరవరుండు గోరు. (౭౭౭)


மலையாளம் (മലയാളം)
ഉലകിൽ വാഴ്‌വതേക്കാളും‍ പുകൾ ‍തേടുന്ന വീരർകൾ ഭം‍ഗിയായ് കരുതീടുന്നു കാൽ ‍കെട്ടാം‍ വിജയക്കുറി. (൭൱൭൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬಿರುಗಾಳಿಯಂತೆ ಭೂಮಿಯಲ್ಲಿ ವ್ಯಾಪಿಸುವ ಕೀರ್ತಿಯನ್ನು ಬಯಸಿ ಪ್ರಾಣವನ್ನು ಲೆಕ್ಕಿಸದ ವೀರರು, ಕಾಲಿಗೆ ಕಟ್ಟುವ ವೀರ ಕಡಗವು ಅವರಿಗೆ ಅಲಂಕಾರವಾಗಿ ಶೋಭಿಸುವುದು. (೭೭೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
स्थिरकीर्तिकृते युद्धे प्राणानपि विमुञ्चताम् ।
पादबद्धा शृङ्खला स्यात् अलङ्कारप्रयोजना ॥ (७७७)


சிங்களம் (සිංහල)
පැතිරෙන යසස දැක - පණනල පවා නොතකන සෙබළා ගෙ පය බැඳි - වීර සලඹක ලකූණ විය යුතූ (𑇧𑇳𑇰𑇧)

சீனம் (汉语)
縱橫天下之戰士, 視繚銬如飾物矣. (七百七十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah mereka yang tidak memperdulikan nyawa-nya tetapi ingin- kan kemashhoran di-dunia merata: gelang yang di-pakai di-kaki-nya ada-lah satu keindahan kapada mata.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
자신의안전이아니라전세계적인영광을추구하는자는미용으로추가할수있는굉장한발찌를착용한다. (七百七十七)

உருசிய (Русский)
Звон ножных браслетов дарует блаженство воинам,,оторые не жалеют жизни, чтобы обрести славу

அரபு (العَرَبِيَّة)
إن الذين لا يبالون بضياع أنفسهم بل يسعون لحصول الشهرة التى تحيط بالأرض خلخا لهم الذى يربطونه حول أقدامهم يبدو لهم فى أعينهم مصدر الإبتهاج والسرور (٧٧٧)


பிரெஞ்சு (Français)
Pour le héros, qui, désirant la gloire qui se répand par toute la terre, ne fait pas cas de sa vie, se revêtir d'une cuirasse équivaut à se parer d'un joyau.

ஜெர்மன் (Deutsch)
Schmuck ist dag Anziehen der Fußringe derer, die überwältigenden Ruhm und nicht ihr eigenes Leben begehren.

சுவீடிய (Svenska)
För dem som åstundar ära mer än livet är själva den fotring de bär i striden en glänsande prydnad.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui laudcm, quae terram cingat, non vitam cupiant, iis auuulus, qui pedem cingit, pulchrum decus est. (DCCLXXVII)

போலிய (Polski)
Obręcz na kostce woja* jest znakiem zuchwałych, Których rozkaz powstrzymać nie może.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22