படைமாட்சி

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.   (௭௱௬௰௯ - 769) 

தேய்ந்து சிறுகுதலும், மனம்நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்!  (௭௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.  (௭௱௬௰௯)
— மு. வரதராசன்


எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.  (௭௱௬௰௯)
— சாலமன் பாப்பையா


சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்  (௭௱௬௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑀼𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀢𑁆 𑀢𑀼𑀷𑀺𑀬𑀼𑀫𑁆 𑀯𑀶𑀼𑀫𑁃𑀬𑀼𑀫𑁆
𑀇𑀮𑁆𑀮𑀸𑀬𑀺𑀷𑁆 𑀯𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀧𑀝𑁃 (𑁘𑁤𑁠𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum
Illaayin Vellum Patai
— (Transliteration)


ciṟumaiyum cellāt tuṉiyum vaṟumaiyum
illāyiṉ vellum paṭai.
— (Transliteration)


An army can triumph if it is free from diminution, Irrevocable aversion and poverty.

ஹிந்தி (हिन्दी)
लगातार करना घृणा, क्षय होना औ’ दैन्य ।
जिसमें ये होते नहीं, पाता जय वह सैन्य ॥ (७६९)


தெலுங்கு (తెలుగు)
వెలితి పేదరికము విసుగును లేకున్న
నిజముగాను సేన విజయమందు (౭౬౯)


மலையாளம் (മലയാളം)
അപകർ‍ഷതയും‍ തീരാദാരിദ്യ്രവുമവജ്ഞയും‍ സേനാനികൾ‍ക്കില്ലായെങ്കിൽ‍ യുദ്ധത്തിൽ‍ വിജയിച്ചിടാം‍. (൭൱൬൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
(ಗಾತ್ರದಲ್ಲಿ) ಕಿರಿದಾಗಿರುವುದು, ಅನುಚಿತವಾದ ಕೋಪ ಮತ್ತು ಬಡತನ ಇವು ಇಲ್ಲವಾದಲ್ಲಿ ಪಡೆಯು ಯುದ್ಧದಲ್ಲಿ ಗೆಲ್ಲುತ್ತದೆ. (೭೬೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
यजमानेष्वविश्वासो दारिद्रयमधिकं तथा ।
द्वयं न स्याद्यादि तदा स्वल्पा सेनापि जेष्यति ॥ (७६९)


சிங்களம் (සිංහල)
සුළුබව දිළිඳුකම - කටයුත්තෙ අකැමැති බව නැත්නම් හැමවිටම - දිනති සේනාව බලවත් සේ (𑇧𑇳𑇯𑇩)

சீனம் (汉语)
軍隊人員充實, 精誠無間, 糧餉無缺, 可以長勝. (七百六十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bala tentera akan selalu-nya menchapai kemenangan dengan sharat tiada lebeh rendah ia dalam bilangan-nya, tidak di-pechah belah oleh kechemburuan dan kebenchian terbiar kebuloran tanpa gaji.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
탈영, 선도할수없는혐오와빈곤이없을때군대는승리하리라. (七百六十九)

உருசிய (Русский)
Победит армия, если она не несет значительных потерь, верит царю и не терпит нужды

அரபு (العَرَبِيَّة)
الجيش يفتح حتما بشرط أن لا يكون عدده أقل من غيره ولا يجد فى صفوفه الحسد والبغض التى لا يمكن إزالتها ولا يواجه الم الجوع لسبب عدم وصول مترباته (٧٦٩)


பிரெஞ்சு (Français)
L'armée vaincra l'ennemi, si elle n'est pas réduite par les pertes, si elle n'a pas la cupidité inguérissable du pillage et si elle ne souffre pas de la misère.

ஜெர்மன் (Deutsch)
Eine Armee kann triumphieren, wenn ihre Starke nicht abnimmt und sie Widerwärtigkeit und Mangel widerstehen kann.

சுவீடிய (Svenska)
Segerrik blir blott den här som icke reduceras, som ej väcker illvilja och icke drabbas av penningbrist.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Cui desint imbecillitas, paver, qui abire nequeat, et inopia, is exer- citus vincet. (DCCLXIX)

போலிய (Polski)
Wojsko, nie obciążone przeczuciem przegranej, Zbrojnych rozpraw i starć nie unika,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22