அவை அஞ்சாமை

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.   (௭௱௨௰௯ - 729) 

தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர் அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்  (௭௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.  (௭௱௨௰௯)
— மு. வரதராசன்


நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.  (௭௱௨௰௯)
— சாலமன் பாப்பையா


ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்  (௭௱௨௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀮𑁆𑀮𑀸 𑀢𑀯𑀭𑀺𑀷𑁆 𑀓𑀝𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀧 𑀓𑀶𑁆𑀶𑀶𑀺𑀦𑁆𑀢𑀼𑀫𑁆
𑀦𑀮𑁆𑀮𑀸 𑀭𑀯𑁃𑀬𑀜𑁆𑀘𑀼 𑀯𑀸𑀭𑁆 (𑁘𑁤𑁜𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum
Nallaa Ravaiyanju Vaar
— (Transliteration)


kallā tavariṉ kaṭaiyeṉpa kaṟṟaṟintum
nallā ravaiyañcu vār.
— (Transliteration)


Scholars dread of facing an assembly of good men Are ranked lower than the ignorant.

ஹிந்தி (हिन्दी)
जो होते भयभीत हैं, विज्ञ-सभा के बीच ।
रखते शास्त्रज्ञान भी, अनपढ़ से हैं नीच ॥ (७२९)


தெலுங்கு (తెలుగు)
చదివి జంకునెడల శాస్త్ర పాటవముండి
విద్యరామికన్న వెలితి యగును. (౭౨౯)


மலையாளம் (മലയാളം)
നല്ല പണ്‌ഡിതനായിട്ടും‍ വിദ്വാന്മാരെ ഭയന്നവൻ അജ്ഞനാം‍ വ്യക്തിയേക്കാളും‍ തരം‍ താഴ്‌ന്നവനായിടും‍. (൭൱൨൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಶಾಸ್ತ್ರಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿಬಲ್ಲವರಾದರೂ, ಚೆನ್ನಾಗಿ ಬಲ್ಲವರ ಸಭೆಯಲ್ಲಿ (ಮಾತನಾಡಲು) ಹೆದುರುವವರು, ಕಲಿಯದವರಿಗಿಂತ, ಕಡೆ ಎಂದೆಣಿಸಲ್ಪಡುವರು. (೭೨೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अधीतज्ञातविद्यांस्तान् विद्वद्गोष्ठयां च भाषितुम् ।
भीतानज्ञातविद्योभ्योऽप्यधमान् मन्यते जन: ॥ (७२९)


சிங்களம் (සිංහල)
උගතූන් සබා මැද - එකඟව කතා නො කළොත් සිප් සතර නොයෙකූත් - උගත්මුත් ඉන් පලක් නොම දේ (𑇧𑇳𑇫𑇩)

சீனம் (汉语)
學人怯場, 人視之遜於文肓也. (七百二十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah mereka yang berpengetahuan tetapi takut berhadapan de- ngan himpunan orang yang budiman: mereka akan di-anggap lebeh rendah daripada orang2 yang tiada berilmu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
좋은의회를대면하기두려워하는박학다식한자는무지한자들보다열등하다. (七百二十九)

உருசிய (Русский)
Мудрые говорят как многоопытные люди, но боящиеся произнести слово, есть последние среди невежд

அரபு (العَرَبِيَّة)
إن الذين تمهروا فى علـمهم ولكن يخافون مواجهة مجلس الفضلاء يعتبرون أقل درجة من الأميين (٧٢٩)


பிரெஞ்சு (Français)
Celui qui a fait de solides études et en connaît le prix, s'il a peur d'une assemblée d'hommes de Bien, est considéré comme le dernier de ceux qui n'ont fait aucune étude.

ஜெர்மன் (Deutsch)
Wer sich trotz seines Lerncns vor der Versammlung Gelehrter fürchtet, wird für schlechter angesehen als ein Analphabet.

சுவீடிய (Svenska)
Lägst ibland de obildade blir de räknadesom med all sin lärdom dock räds inför de visas råd.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Eorum, qui nihil didicerunt, ultimi dicentur , qui, quamvis docti sint, bonorum coetum timeant. (DCCXXIX)

போலிய (Polski)
Cóż jest wart ten, co boi się własnych słuchaczy, Kiedy trza wypowiedzieć swe zdanie?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22