அவை அஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.   (௭௱௨௰௧ - 721) 

சொற்களின் தொகை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய்சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள்  (௭௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.  (௭௱௨௰௧)
— மு. வரதராசன்


சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.  (௭௱௨௰௧)
— சாலமன் பாப்பையா


சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்  (௭௱௨௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀓𑁃𑀬𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀯𑀮𑁆𑀮𑀯𑁃 𑀯𑀸𑀬𑁆𑀘𑁄𑀭𑀸𑀭𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀷𑁆
𑀢𑁄𑁆𑀓𑁃𑀬𑀶𑀺𑀦𑁆𑀢 𑀢𑀽𑀬𑁆𑀫𑁃 𑀬𑀯𑀭𑁆 (𑁘𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Vakaiyarindhu Vallavai Vaaisoraar Sollin
Thokaiyarindha Thooimai Yavar
— (Transliteration)


vakaiyaṟintu vallavai vāycōrār colliṉ
tokaiyaṟinta tūymai yavar.
— (Transliteration)


The pure skillful orators, knowing the council's strength, Never fail in their speech.

ஹிந்தி (हिन्दी)
शब्द शक्ति के ज्ञानयुत, जो जन हैं निर्दोष ।
प्राज्ञ-सभा में ढब समझ, करें न शब्द सदोष ॥ (७२१)


தெலுங்கு (తెలుగు)
పలుకులందు భవ్యభావమ్ము గలవారు
సభకుజంకి మాట సడలరెపుడు. (౭౨౧)


மலையாளம் (മലയാളം)
വാക്കി‍ൽ സമർത്ഥരായുള്ളോർ‍ സഭാമേന്മ കണക്കാക്കി യോഗ്യർ‍ മുന്നിലബദ്ധങ്ങളുരിയാടില്ലൊരിക്കലും‍. (൭൱൨൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮಾತಿನ ಜೋಡಣೆಯನ್ನು ಅರಿತ ಪರಿಶುದ್ಧವಾದ ನಡೆಯುಳ್ಳವರು, ಸಭೆಯ ರೀತಿಯನ್ನು ಅರಿತವರಾಗಿ, ಬಲ್ಲವರ ಸಭೆಯಲ್ಲಿ (ಭೀತಿಯಿಂದ) ಬಾಯಿತಪ್ಪಿ ತಪ್ಪಾಗಿ ಮಾತನಾಡಲಾರರು. (೭೨೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सभास्वभावविदुषां भयनापि सभाङ्गणे ।
न स्यात् स्खालित्यमेतेषां शब्दतत्त्वविदां नृणाम् ॥ (७२१)


சிங்களம் (සිංහල)
පැහැදිලි වදනැති - පරම අදහස් ඇත්තෝ වියතූන් සබා මැද - වැරදි ලෙස නො කෙරෙති කතාවක් (𑇧𑇳𑇫𑇡)

சீனம் (汉语)
演講有術者, 在高明之聽衆前亦不惶恐. (七百二十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Awasi-lah mereka yang telah mempelajari kepetahan beruchap dan mempunyai chita rasa yang tinggi: mereka akan mengetahui bagai- mana menyusun uchapan-nya dan tidak akan gagal di-hadapan ha- dhirin yang bijaksana.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
청중의특질과말의힘을알고있는순수한마음의웅변가는연설할때결코머뭇거리지않는다. (七百二十一)

உருசிய (Русский)
Умные и красноречивые ораторы умеют распознать настроение собрания и не запнутся в своих речах

அரபு (العَرَبِيَّة)
إن الذين برعوا فى فن البلاغة ويتذوقون فيها يعرفون كيف يرتبون خطباتهم فلا يرسبون ولا يفضلون أمام الحكماء والعقلاء (٧٢١)


பிரெஞ்சு (Français)
Les purs de cœur, qui connaissent l'effet de la parole, ne font pas de fautes lorsqu'ils parient dnas un assemblée de savants, dont ils se sont assuré de la qualité.

ஜெர்மன் (Deutsch)
Untadelige kennen die Bedeutung der Worte und die Natur der Versammlung - selbst unter Gelehrten zaudern sie nicht. 

சுவீடிய (Svenska)
De otadliga som väl behärskar talekonsten behöver ej sväva på målet i de mäktigas rådsförsamling, vars sammansättning de först har studerat.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
(Coetus) conditionem perspicientes, numquam ore titubant thesau- rum verborum perspicientes viri puri. (DCCXXI)

போலிய (Polski)
Ten, co chętnie przebywa w kolegium wybranych, Na mównicy też czuje się dobrze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22