வினைசெயல் வகை

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.   (௬௱௭௰௭ - 677) 

ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவனிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும்  (௬௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்  (௬௱௭௰௭)
— மு. வரதராசன்


ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.  (௬௱௭௰௭)
— சாலமன் பாப்பையா


ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்  (௬௱௭௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀺𑀷𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑀷𑁆𑀫𑀼𑀶𑁃 𑀅𑀯𑁆𑀯𑀺𑀷𑁃
𑀉𑀴𑁆𑀴𑀶𑀺𑀯𑀸𑀷𑁆 𑀉𑀴𑁆𑀴𑀫𑁆 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁗𑁤𑁡𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Seyvinai Seyvaan Seyanmurai Avvinai
Ullarivaan Ullam Kolal
— (Transliteration)


ceyviṉai ceyvāṉ ceyaṉmuṟai avviṉai
uḷḷaṟivāṉ uḷḷam koḷal.
— (Transliteration)


Experts have the expertise. Get that expertise by knowing him inside out.

ஹிந்தி (हिन्दी)
विधि है कर्मी को यही, जब करता है कर्म ।
उसके अति मर्मज्ञ से, ग्रहण करे वह मर्म ॥ (६७७)


தெலுங்கு (తెలుగు)
అనుభవజ్ఞుడైన నడిగి జేసిన కార్య
మెప్పటికిని చెడక మెప్పు వడయు. (౬౭౭)


மலையாளம் (മലയാളം)
തൽക്കർമ്മം മുമ്പേ ചെയ്തു ശീലമുള്ള ജനങ്ങളെ ബന്ധിച്ചനുഭവം പങ്കിട്ടറിയൽ ജയഹേതുവാം (൬൱൭൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಂದು ಕೆಲಸದಲ್ಲಿ ತೊಡಗಿದವನು ಮಾಡಬೇಕಾದ ಕರ್ತವ್ಯವೆಂದರೆ, ಆ ಕೆಲಸದ ರಹಸ್ಯವನ್ನು ಚೆನ್ನಾಗಿ ತಿಳಿದವನ ಸಲಹೆಯನ್ನು ಪಡೆದುಕೊಳ್ಳುವುದು. (೬೭೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कार्ये प्राप्ते क्रियातत्त्वं बुध्वा पूर्वं तु सा क्रिया ।
यै: कृता भावमेषां च ज्ञात्वा कार्ये मतिं कुरु ॥ (६७७)


சிங்களம் (සිංහල)
කිරියක යෙදෙන විට - එහි තතූ හොඳින් දන්නා අයගෙන් පළමු කොට - අසා අනුශාසනා ගත යුතූ (𑇦𑇳𑇰𑇧)

சீனம் (汉语)
諮詢老於此道者而後決定, 行之乃有成. (六百七十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Chara menchapai kejayaan di-dalam sa-suatu pekerjaan ia-lah mem- pelajari rahsia tentang-nya dengan mendampingi orang yang benar2 pakar dalam kerja tersebut.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
행동을수행하는가장좋은방법은전문가의기술을배우는것이다. (六百七十七)

உருசிய (Русский)
Человек, который должен осуществить задуманное деяние, должен посоветоваться с мудрыми о путях осуществления, не забывая расспросить и о сокрытии тайных деяний

அரபு (العَرَبِيَّة)
طريق الفوز فى إنجاز عمل كبير هي أن تعرف اسرار الرجل الـذى لـه تجربة خاصة فى ذلك بعد ما تتسرب فى أعماق قلبه (٦٧٧)


பிரெஞ்சு (Français)
Voici la manière d'agir de celui qui entreprend une affaire: connaître l'opinion d'un expert en la matière.

ஜெர்மன் (Deutsch)
Wer etwas unternehmen will, soll danach handeln: von dem lernen, der die Schwierigkeiten des Unterfangens kennt.

சுவீடிய (Svenska)
Rätt metod för den som verkställer ett beslutär att fråga den till råds som är expert i saken.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Rectus erit agendi modus, si quis rem velit gerere, sententiam eorum comperire, qui ejus gerendne periti sunt (DCLXXVII)

போலிய (Polski)
Podejmując czyn trzeba i to spożytkować, Co poufnie ci wywiad przyniesie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22