நெருப்பு முழுவதும் அணையாமல் சிறிதளவு தங்கி விடுமானால், பின்னர் கொளுந்து விட்டு எரிந்து, அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பொருள்களை எல்லாம் அழித்து சாம்பலாக்கிவிடும்.
அதுபோல, தொழிலும் பகையும்.
தொடங்கப்பட்ட தொழிலானது, முற்றுப்பெறாமல், நின்றுவிடுமானால், தொடங்கியவனுடைய புகழ் கெடுவதோடு, அவனும் அழிந்துவிடுவான்.
அதைப்போலவே, பகைவர்கள் ஒன்று இரண்டு பேர் மிஞ்சியிருந்தால் பிறகு அவர்கள் பெருகி, அரசை- ஆட்சியை ஒழித்துவிடுவார்கள்.
"செயலில் குறைபாடு, பகையில் மீதி, நெருப்பின் மிச்சம், இவை பிறகு பெரிதாகி, அழிவை உண்டாக்கும்" என்பது தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது.