வினைசெயல் வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.   (௬௱௭௰௧ - 671) 

ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்; அவ்வாறு துணிவு கொண்ட பின், அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்  (௬௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.  (௬௱௭௰௧)
— மு. வரதராசன்


ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.  (௬௱௭௰௧)
— சாலமன் பாப்பையா


ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்  (௬௱௭௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀽𑀵𑁆𑀘𑁆𑀘𑀺 𑀫𑀼𑀝𑀺𑀯𑀼 𑀢𑀼𑀡𑀺𑀯𑁂𑁆𑀬𑁆𑀢𑀮𑁆 𑀅𑀢𑁆𑀢𑀼𑀡𑀺𑀯𑀼
𑀢𑀸𑀵𑁆𑀘𑁆𑀘𑀺𑀬𑀼𑀴𑁆 𑀢𑀗𑁆𑀓𑀼𑀢𑀮𑁆 𑀢𑀻𑀢𑀼 (𑁗𑁤𑁡𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Soozhchchi Mutivu Thuniveydhal Aththunivu
Thaazhchchiyul Thangudhal Theedhu
— (Transliteration)


cūḻcci muṭivu tuṇiveytal attuṇivu
tāḻcciyuḷ taṅkutal tītu.
— (Transliteration)


The end of deliberation is decision. To decide and dawdle is bad.

ஹிந்தி (हिन्दी)
निश्चय कर लेना रहा, विचार का परिणाम ।
हानि करेगा देर से, रुकना निश्चित काम ॥ (६७१)


தெலுங்கு (తెలుగు)
నిర్ణయమున కెల్ల నిర్వాహ దీక్షయే
యాలసింప దాని కవగుణమ్ము. (౬౭౧)


மலையாளம் (മലയാളം)
തീരുമാനം എടുക്കും മുൻ ഗാഢമായ് ചിന്ത ചെയ്യണം തീരുമാനം നടപ്പാക്കാൻ വൈകിക്കുന്നത് ദോഷമാം (൬൱൭൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಂದು ಕೆಲಸ ಬಗ್ಗೆ, ಹಲವರಲ್ಲಿ ಆಲೋಚಿಸಿ ವಿಚಾರ ಮಾಡಿ ನಿರ್ಧಾರವನ್ನು ಕೈಗೊಳ್ಳಬೇಕು; ಆ ರೀತಿ ಕೈಗೊಂಡ ನಿರ್ಧಾರವನ್ನು ಕಾಲಹರಣದಿಂದ ನಿರ್ಧಾನಿಸಿದರೆ ಅದರಿಂದ ಕೆಡುಕೇ ಆಗುವುದು. (೬೭೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अनिवार्यमिदं चेति विमर्शन्निर्णये सति ।
आलस्यं नैव कर्तव्यमन्यथा व्यसनं भवेत् ॥ (६७१)


சிங்களம் (සිංහල)
විමසුමෙහි අවසන - තීරණය වේ නිතරම එ පරිදි කිරීමට - පමා වීමෙන් විපත් පමිණේ (𑇦𑇳𑇰𑇡)

சீனம் (汉语)
考慮之結果爲決定; 決定之後, 若遅遲而施行之, 有害. (六百七十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Keakhiran segala perbinchangan ia-lah mengambil ketetapan: dan apabila sa-suatu ketetapan sudah di-ambil, salah-lah untok ber- tanggoh2 melaksanakan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
심사숙고한결정을택한후, 그조치를지연하는것은매우해롭다. (六百七十一)

உருசிய (Русский)
Мужество для деянии приходит лишь после длительного размышления. Обдумав все, приступай к свершению

அரபு (العَرَبِيَّة)
التدابير كلها لابـد أن تكون بغرض الوصول إلى حكم وقرار فاذا وصلت إلى قرار فاعمل به إذ لا يجوز التاخير فى إنجازه (٦٧١)


பிரெஞ்சு (Français)
La fin de toute délibération est d'arriver à une décision; en différer l'exécution est une faute.

ஜெர்மன் (Deutsch)
Die Überlegung endet mir einem Entschluß – die Ausführung eines Entschlusses aufzuschieben ist Schlecht. 

சுவீடிய (Svenska)
Låt varje rådslag leda till beslut. Att sedan dröja med dess verkställande är av ondo.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Consilium capere consultationis finis est, si consilium illud in animo fracto haerebit, malum erit. (DCLXXI)

போலிய (Polski)
Dwa kolejne ogniwa - to plan i działanie. Nie spoczywaj, nim zagrasz swą rolę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22