வினைத்தூய்மை

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.   (௬௱௫௰௭ - 657) 

பழிகளைச் செய்து, அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தை காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்ததாகும்  (௬௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.  (௬௱௫௰௭)
— மு. வரதராசன்


பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.  (௬௱௫௰௭)
— சாலமன் பாப்பையா


பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்  (௬௱௫௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀵𑀺𑀫𑀮𑁃𑀦𑁆𑀢𑀼 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺𑀬 𑀆𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀘𑀸𑀷𑁆𑀶𑁄𑀭𑁆
𑀓𑀵𑀺𑀦𑀮𑁆 𑀓𑀼𑀭𑀯𑁂 𑀢𑀮𑁃 (𑁗𑁤𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror
Kazhinal Kurave Thalai
— (Transliteration)


paḻimalaintu eytiya ākkattiṉ cāṉṟōr
kaḻinal kuravē talai.
— (Transliteration)


Better the pinching poverty of the wise Than the pile of wealth hoarded by vice.

ஹிந்தி (हिन्दी)
दोष वहन कर प्राप्त जो, सज्जन को ऐश्वर्य ।
उससे अति दारिद्रय ही, सहना उसको वर्य ॥ (६५७)


தெலுங்கு (తెలుగు)
దుష్కృతంబు వలన దొర యౌటకన్నను
వేదవడిన శిష్టవృత్తి మేలు. (౬౫౭)


மலையாளம் (മലയാളം)
ഇഴിവാം പാപകർമ്മത്താൽ ലബ്ധദ്രവ്യം നിഷിദ്ധമാം ധർമ്മകർമ്മികൾ താങ്ങുന്ന ദാരിദ്ര്യം തന്നെ കാര്യമാം (൬൱൫൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನಿಂದೆಯನ್ನು ಧರಿಸಿ (ಕೀಳು ಕೆಲಸಮಾಡಿ) ಸಂಪಾದಿಸಿದ ಐಶ್ವರ್ಯಕ್ಕಿಂತ, ವಿಚಾರವಂತರ ಕಡು ಬಡತನವೇ ಲೇಸು. (೬೫೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
विधाय निन्दितं कार्यं सापवादं धनार्जनात् ।
विर्दुष्टकर्मजनितदारिद्र्यं हि सतां वरम् ॥ (६५७)


சிங்களம் (සිංහල)
නිගා නින්දාවන් - ලැබ රැස්කරණ දුදනන් දනවත්කමට වැඩි - උසස් වේ සුදනගෙ නිදනකම් (𑇦𑇳𑇮𑇧)

சீனம் (汉语)
賢者忍於貧困, 遠勝於犯罪以致富. (六百五十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kepapaan orang2 yang berbudi lebehjauh baik-nya daripada kekaya- an yang di-kumpulkan dengan chara2 keji.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
유식한자의빈고는부정축재보다훨씬낫다. (六百五十七)

உருசிய (Русский)
Нищета мудрого человека намного лучше сокровищ,,олучаемых человеком бесчестным

அரபு (العَرَبِيَّة)
الفقر أحسن لرجل كبير من ثروة تـحـصـل لـه من الذرائع الخسيسة المذمومة (٦٥٧)


பிரெஞ்சு (Français)
L'extrême pauvreté des vertueux vaut mieux que la richesse amassée en se rendant coupable de mauvaises actions.

ஜெர்மன் (Deutsch)
Die äußerste Antun des Tugendhaften ist besser als der Reichtum, erworben durch verwerfliche Taten.

சுவீடிய (Svenska)
Långt bättre än den rikedom som vinns med onda medel är de rättrådigas torftiga villkor.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Summa panpertas sapientis mclior est divitiis, quas consequaris in culpam incidens. (DCLVII)

போலிய (Polski)
Lepsze stokroć ubóstwo i ciężkie zmagania Niż dostatek bogaczów nieprawych.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22