வினைத்தூய்மை

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.   (௬௱௫௰௫ - 655) 

‘என்ன செய்தோம்’ என்று பின்னர் வருந்தக் கூடியதான செயல்களைச் செய்யவே கூடாது; செய்துவிட்டால், பின்னர் அதைப்பற்றி வருந்தாமலிருப்பது நன்று  (௬௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.  (௬௱௫௰௫)
— மு. வரதராசன்


என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.  (௬௱௫௰௫)
— சாலமன் பாப்பையா


`என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று  (௬௱௫௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀇𑀭𑀗𑁆𑀓𑀼𑀯 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀶𑁆𑀓 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀷𑁂𑀮𑁆
𑀫𑀶𑁆𑀶𑀷𑁆𑀷 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁃 𑀦𑀷𑁆𑀶𑀼 (𑁗𑁤𑁟𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Etrendru Iranguva Seyyarka Seyvaanel
Matranna Seyyaamai Nandru
— (Transliteration)


eṟṟeṉṟu iraṅkuva ceyyaṟka ceyvāṉēl
maṟṟaṉṉa ceyyāmai naṉṟu.
— (Transliteration)


Do not do what you will regret; and if you do, Better not repeat the same.

ஹிந்தி (हिन्दी)
जिससे पश्चात्ताप हो, करो न ऐसा कार्य ।
अगर किया तो फिर भला, ना कर ऐसा कार्य ॥ (६५५)


தெலுங்கு (తెలుగు)
చేయరాదు వెనక జింతించు పనులను
చేసియున్న మఱల చేయవలదు. (౬౫౫)


மலையாளம் (മലയാളം)
പിമ്പേ ഖേദിക്കുമാറുള്ള തിന്മകളൊഴിവാക്കണം അഥവാ ചെയ്തു പോയെങ്കിലാവർത്തിക്കാതിരിക്കണം (൬൱൫൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಏನು ಎಂಥ ಕೆಲಸ ಮಾಡಿದೆ!' ಎಂದು ನಂತರ ಆಲೋಚಿಸಿ ದುಃಖಿಸುವ ಕಾರ್ಯವನ್ನು ಮಾಡದಿರಲಿ; ಒಂದುವೇಳೆ ತಪ್ಪಿ ಮಾಡಿದರೂ ಮತ್ತೆ ಅದು ಪುನರಾವರ್ತಿಯಾಗದಿರುವುದು ಒಳ್ಳೆಯದು. (೬೫೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
पश्चात्तापकरं कार्यं न कुर्वीत कदाचन ।
प्रमादेन कृते चापि पश्चातापमतिं त्यज ॥ (६५५)


சிங்களம் (සිංහල)
පසු තැවිලි වන දා - නො කර ඉඳුම ම හොඳ වේ අමතක වී කළත් - දෙවනු පසු තැවිලිවනු වැරදි (𑇦𑇳𑇮𑇥)

சீனம் (汉语)
行事而將追悔於後者, 莫爲之; 若曾爲之, 莫再爲之. (六百五十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Usah-lah sa-saorang melakukan apa2 yang membuat-nya memekek kemudian-nya, Apa-lah yang telah aku lakukanl dan sa-kira-nya sudah ia melakukan-nya, jangan-lah lagi ia mengulangi-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
나중에후회할일은아무것도하지않아야한다.만일했다면, 그실수를반복하지않아야한다. (六百五十五)

உருசிய (Русский)
Не совершай деяний, после которых придется восклицать «О, что же я натворил!» А если уж сделал нечто такое, то впредь не допускай подобное

அரபு (العَرَبِيَّة)
لا يرتكب احد أعمالا تجعله يصيح من بعد " ماذا فعلت؟" فأن ارتكب هذه الأعمال ليس له أن يعود إليها مرة أخرى (٦٥٥)


பிரெஞ்சு (Français)
S'abstenir des actes dont on aura à se repentir plus tard et si (par malheur) on les fait, il est bon de ne pas recommencer.

ஜெர்மன் (Deutsch)
Tu keine Taten, die selbst Reue verursachen – hast du sie getan, ist es besser, sie nicht wieder zu tun.

சுவீடிய (Svenska)
Aldrig må en minister handla så att han måste säga sig: ”Vad gjorde jag egentligen?” Men har han en gäng gjort det är det bäst att icke gräma sig till ingen nytta.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Noli umqua.m facere propter quod tibi querendum sit: (vae) quid (feci)! si tamen feeeris, bonum erit non iterum talia. facere. (DCLV)

போலிய (Polski)
Więc nie lubuj się nigdy w niegodnych wyczynach Nie powtarzaj ich - gdy już zgrzeszyłeś.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22