வினைத்தூய்மை

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.   (௬௱௫௰௪ - 654) 

கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள்  (௬௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.  (௬௱௫௰௪)
— மு. வரதராசன்


தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.  (௬௱௫௰௪)
— சாலமன் பாப்பையா


தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்  (௬௱௫௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀝𑀼𑀓𑁆𑀓𑀡𑁆 𑀧𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀇𑀴𑀺𑀯𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀭𑁆
𑀦𑀝𑀼𑀓𑁆𑀓𑀶𑁆𑀶 𑀓𑀸𑀝𑁆𑀘𑀺 𑀬𑀯𑀭𑁆 (𑁗𑁤𑁟𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Itukkan Patinum Ilivandha Seyyaar
Natukkatra Kaatchi Yavar
— (Transliteration)


iṭukkaṇ paṭiṉum iḷivanta ceyyār
naṭukkaṟṟa kāṭci yavar.
— (Transliteration)


Men of clear understanding Will not do mean acts even in distress.

ஹிந்தி (हिन्दी)
यद्यपि संकट-ग्रस्त हों, जिनका निश्चल ज्ञान ।
निंद्य कर्म फिर भी सुधी, नहीं करेंगे जान ॥ (६५४)


தெலுங்கு (తెలుగు)
గాసితోడ నెన్ని కష్టాల పాలైన
చిత్త బలులు హీనవృత్తి దిగరు. (౬౫౪)


மலையாளம் (മലയാളം)
മാന്യരായുള്ളവർ തങ്ങൾക്കേർപ്പെട്ട ദുരിതങ്ങളെ നിർമാർജ്ജനം ചെയ്വാനായി ഹീനകൃത്യങ്ങൾ ചെയ്തിടാ (൬൱൫൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಮದರ್ಶಿಯಾದ ದೃಷ್ಟಿಯುಳ್ಳವರು ತಾವು ಸಂಕಟದಲ್ಲಿ ಸಿಲುಕಿದರೂ ಕೀಳ್ತರದ ಕೆಲಸಗಳಲ್ಲಿ ತೊಡಗುವುದಿಲ್ಲ. (೬೫೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्राप्तोऽपि व्यसने तस्य निर्मूलनकृतेऽपि वा ।
निन्द्यं कार्यं न कुर्वन्ति विशुद्धमतयो जना: ॥ (६५४)


சிங்களம் (සිංහල)
විපතක් පැමිණිය දා - නො සැලෙන හරි දැකූම් ඇති ගූණ වත්තූ ඇම දා - පහත් කටයුතූ නොම කෙරෙත්මැයි (𑇦𑇳𑇮𑇤)

சீனம் (汉语)
行爲純潔之士, 卽在逆境, 亦不用下流手段. (六百五十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah mereka yang melihat segala di-dalam perimbangan-nya: biar pun malang menimpa diri, tidak sa-kali2 di-laku-nya perbuatan hina dan keji.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
선견지명을가진자는극심한곤란속에서도부끄러울것이없다. (六百五十四)

உருசிய (Русский)
Люди, которые ясно видят положение вещей и преисполненные честности,,е совершат позорных деяний, даже если их постигнет беда

அரபு (العَرَبِيَّة)
إن الذين يقدرون الاشياء حق التقدير لا يرتكبون أعمالا وضيعة وغير شريفة حتى فى حالة الإبتلاء والمحـن (٦٥٤)


பிரெஞ்சு (Français)
Ceux qui ont l'esprit toujours lucide et stable, même lorsqu'ils souffrent de la misère, ne se livrent pas à des actes qui les déshonorent aux yeux de leurs bienfaiteurs.

ஜெர்மன் (Deutsch)
Wer kein abschweifendes Vorstellungsvermögen hat, tut keine schändlichen Taten, auch nicht in Schwierigkeiten.

சுவீடிய (Svenska)
Även om de råkar i trångmål tar de omdömesgilla aldrig sin tillflykt till förkastliga handlingar.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Sapientes immoti, etiamsi in damnum ineidaut, nihil facient, quod umqua.m dedeeus a.fferat. (DCLIV)

போலிய (Polski)
Zaden fakt nie rozgrzeszy wielkiego człowieka, Gdy swój lot nierozważnie obniży.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22