சொல்வன்மை

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.   (௬௱௫௰ - 650) 

தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர்  (௬௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.  (௬௱௫௰)
— மு. வரதராசன்


தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.  (௬௱௫௰)
— சாலமன் பாப்பையா


கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்  (௬௱௫௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀡𑁆𑀭𑀼𑀵𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀶𑀸 𑀫𑀮𑀭𑀷𑁃𑀬𑀭𑁆 𑀓𑀶𑁆𑀶𑀢𑀼
𑀉𑀡𑀭 𑀯𑀺𑀭𑀺𑀢𑁆𑀢𑀼𑀭𑁃𑀬𑀸 𑀢𑀸𑀭𑁆 (𑁗𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu
Unara Viriththuraiyaa Thaar
— (Transliteration)


iṇruḻttum nāṟā malaraṉaiyar kaṟṟatu
uṇara viritturaiyā tār.
— (Transliteration)


Those who can't express what they have learnt Are a bunch of flowers without scent.

ஹிந்தி (हिन्दी)
पठित ग्रन्थ व्याख्या सहित, प्रवचन में असमर्थ ।
खिला किन्तु खुशबू रहित, पुष्य-गुच्छ सम व्यर्थ ॥ (६५०)


தெலுங்கு (తెలుగు)
పరిమళమ్ము లేక విరిసిన పూగుత్తి
చదివి వ్యక్తపరుప జాలకున్న. (౬౫౦)


மலையாளம் (മലയാളം)
ഭാഷണത്രാണിയില്ലാത്ത പണ്ഢിതശ്രേഷ്ഠരൊക്കെയും സുഗന്ധധാരയില്ലാതെ വിലസീടുന്ന പൂക്കളാം (൬൱൫൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತಾವು (ಗ್ರಂಥಗಳಿಂದ) ಕಲಿತುದನ್ನು (ಇತರರು) ತಿಳಿಯುವಂತೆ ವಿಶದವಾಗಿ ವ್ಯಕ್ತಗೊಳಿಸಲಾರದವರು ಗೊಂಚಲು ಗೊಂಚಲಾಗಿ ಅರಳಿಯೂ, ಪರಿಮಳವನ್ನು ಬೀರದ ಹೂವುಗಳನ್ನು ಹೋಲುವರು. (೬೫೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अधीतग्रन्थमन्येषां ये बोधयितुमक्षमा: ।
निर्गन्धफुल्लकुसुमै: ते भजन्ते समानताम् ॥ (६५०)


சிங்களம் (සිංහල)
උගත් දැය නිසි ලෙස - විසිතූරු කර කියන්නට නො දත් අය ලෙව්හි - පිපුණ මුත් සුවඳ නැති මල් මෙනි (𑇦𑇳𑇮)

சீனம் (汉语)
有所知而不闌明於人, 類如花開而全無香氣也. (六百五十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perhatikan-lah mereka yang tidak dapat menyampaikan kapada orang lain pengetahuan yang telah di-dapat-nya: mereka ada-lah saperti bunga kembang yang tidak berbau.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
학식이많은것을표현할수없는자들은향기없는꽃과같다. (六百五十)

உருசிய (Русский)
Люди, неспособные ярко и внятно высказать свои мысли,,одобны распустившемуся, но лишенному аромата цветку

அரபு (العَرَبِيَّة)
إن الذين لا يقدرون على شرح وتوضيح ما تعلموا من علم مثلهم كمثل الأزهار تـتـفـتح أولاقها ولكن لا تتأرج ولا تفوح منها الرائحة الطيبة (٦٥٠)


பிரெஞ்சு (Français)
Ceux qui ne peuvent pas développer les connaissances qu'ils ont acquises par leurs études, de manière à les faire comprendre, ressemblent à la fleur épanouie mais qui n'a pas de parfum.

ஜெர்மன் (Deutsch)
Wer sein Gelerntes nicht verständlich zu erklären vermag, ist wie ein Blumengebinde ohne Duft.

சுவீடிய (Svenska)
Likt doftlösa blommor i klasar är de som ej förmår delge andra sin kunskap.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Flori, qui in fasciculo floret, sed odorem non reddit, similis est, qui quod didicit, edere et perspicue eloqui nescit. (DCL)

போலிய (Polski)
Cóż, że gdzieś się uczyli, gdy nikt nie wydusi Z nich tej wiedzy, co weszła do głowy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மலர்ந்ததும் கற்றதும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

கொத்துக் கொத்தாக செடியின் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஆனால், அதில் வாசனை- (மணம்) இல்லை. நன்றாக மலர்ந்தும், மணமில்லாத மலர், யாருக்கு என்ன பயனைத் தரமுடியும்?

அதுபோல, ஒருவர், தான் கற்று உணர்ந்த அரிய கருத்துக்களை தெளிவாக, பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும். அவரிடம் அதற்கான திறமை இல்லை என்றால் அவர் கற்றதனால் யாருக்கு என்ன பயன்? பூக்கள் பூத்திருப்பது, கல்வி அறிவுடையவனாக இருப்பது போன்றது.

பூக்கள் வாசனையோடு இருப்பது மற்றவர்களுக்கு பயன்பட்டு இன்பம் தருவது.


இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22