அமைச்சு

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.   (௬௱௩௰௩ - 633) 

பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன்  (௬௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.  (௬௱௩௰௩)
— மு. வரதராசன்


நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.  (௬௱௩௰௩)
— சாலமன் பாப்பையா


அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்  (௬௱௩௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀺𑀭𑀺𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀧𑁂𑀡𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑀮𑀼𑀫𑁆 𑀧𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀧𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀯𑀮𑁆𑀮 𑀢𑀫𑁃𑀘𑁆𑀘𑀼 (𑁗𑁤𑁝𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Piriththalum Penik Kolalum Pirindhaarp
Poruththalum Valla Thamaichchu
— (Transliteration)


pirittalum pēṇik koḷalum pirintārp
poruttalum valla tamaiccu.
— (Transliteration)


An able minister can disunite allies, Cherish friends and reunite enemies.

ஹிந்தி (हिन्दी)
फूट डालना शत्रु में, पालन मैत्री-भाव ।
लेना बिछुड़ों को मिला, योग्य आमात्य-स्वभाव ॥ (६३३)


தெலுங்கு (తెలుగు)
సచివుఁ డెరుగవలయు సామ దానమ్ములు
చెదరగొట్టి మఱలఁ జేరదీయ. (౬౩౩)


மலையாளம் (മലയാളം)
ദ്രോഹം ചെയ്തവരെത്തള്ളി, സ്വപക്ഷം ഭദ്രമാക്കിയും ഭ്രഷ്ടരെ വീണ്ടെടുക്കാനും വല്ലോൻ മന്ത്രിക്ക് യോഗ്യനാം (൬൱൩൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹಗೆಗಳಿಗೆ ನೆರವಾಗುವವರನ್ನು ದೊರಮಾಡಿ, ತನ್ನೊಡನೆ ಇರುವವರನ್ನು ರಕ್ಷಿಸುತ್ತ ತನ್ನಿಂದ ದೊರವಾದವರನ್ನು ಮತ್ತೆ ಸೇರಿಸಿಕೊಳ್ಳಬಲ್ಲವನೇ ಮಂತ್ರಿಯು. (೬೩೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
रिपुपक्षजनत्यक्ता स्वपक्षजनरक्षक: ।
गातानां पुनरानेता भवेत् सचिवसत्तम: ॥ (६३३)


சிங்களம் (සිංහල)
උනුන් බිඳුවන්නට - බිඳුනන් මිතූරු කරනට සමත් වෙති ඇමතිඳු - වෙන්වුවන් එක් රැස් කිරීමට (𑇦𑇳𑇬𑇣)

சீனம் (汉语)
能臣可以離間仇敵之盟友, 而使其勢孤; 又可廣結盟友, 使疏遠者歸於親近. (六百三十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Dia yang dapat memechahkan seteru, menghargai dan memelihara persahabatan lama, dan berbaik sa-mula dengan mereka yang men-jadi musoh—dia-lah yang harus jadi menteri-mu sejati.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
장관이란적의동맹군을분열하고, 친구를소중히하고, 분리된자들을결합할수있는자이다. (六百三十三)

உருசிய (Русский)
Истинный советник тот, кто в состоянии вбить клин в союз недругов,,плачивать своих союзников и вновь соединять порвавшиеся узы дружбы

அரபு (العَرَبِيَّة)
الوزير الفائق هو الذى يفرق أعداءه ويحافظ على صداقته من الناس ويؤلف بين أصدقاءه الذين صار بعضهم أعداء لبعض (٦٣٣)


பிரெஞ்சு (Français)
Est ministre, celui qui est habile à faire naître la scission parmi les alliés de l'ennemi, à conserver l'union parmi ses alliés (au moyen des dons et des paroles agréables) et à pardonner à ceux qui se sont séparés de lui.

ஜெர்மன் (Deutsch)
Feindesmacht spalten, Freunde preisen, zerbrochene Freundschaft wiederherstellen – wer darin wohl bewandert ist, ist ein guier Minister.

சுவீடிய (Svenska)
Att utså splittring <bland fiender>, att omhulda de sina och återvinna förlorade bundsförvanter, däri ligger statsmannens styrka.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Dissociare , amicitiam colere, diesociatos reconciliare posse mini- stri est offici um. (DCXXXIII)

போலிய (Polski)
Czasem państwa sąsiednie poróżnić należy, Jeśli któreś ma wrogie intencje.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22