ஆள்வினையுடைமை

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.   (௬௱௰௮ - 618) 

நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும்  (௬௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.  (௬௱௰௮)
— மு. வரதராசன்


உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.  (௬௱௰௮)
— சாலமன் பாப்பையா


விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்  (௬௱௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁄𑁆𑀶𑀺𑀬𑀺𑀷𑁆𑀫𑁃 𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀵𑀺𑀬𑀷𑁆𑀶𑀼 𑀅𑀶𑀺𑀯𑀶𑀺𑀦𑁆𑀢𑀼
𑀆𑀴𑁆𑀯𑀺𑀷𑁃 𑀇𑀷𑁆𑀫𑁃 𑀧𑀵𑀺 (𑁗𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu
Aalvinai Inmai Pazhi
— (Transliteration)


poṟiyiṉmai yārkkum paḻiyaṉṟu aṟivaṟintu
āḷviṉai iṉmai paḻi.
— (Transliteration)


Ill-luck is never blamed. What is blamed Is knowledge without exertion.

ஹிந்தி (हिन्दी)
यदि विधि नहिं अनुकूल है, तो न किसी का दोष ।
खूब जान ज्ञातव्य को, यत्न न करना दोष ॥ (६१८)


தெலுங்கு (తెలుగు)
లేకయున్న నింద లేదండ్రు యత్నంబు
జేయనవుడె నింద జేరు నతని. (౬౧౮)


மலையாளம் (മലയാളം)
നന്മയുൽപ്പാദനം ചെയ്യാനാവാഞ്ഞാൽ വീഴ്ചയായിടാ പഠിച്ചദ്ധ്വാനവും ചെയ്യാൻ മടിച്ചാൽ വീഴ്ച തന്നെയാം (൬൱൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ದಾರಿದ್ರ್ಯವು ಯಾರಿಗೂ ದೋಷವಲ್ಲ; ಅರಿವಿನಿಂದ ವಿಚಾರಮಾಡಿ ಪ್ರಯತ್ನ ಮಾಡದಿದ್ದರೆ ಅದು ದೋಷವಾಗುವುದು. (೬೧೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
ज्ञात्वा यथावक्तार्येषु यत्‍न: स्वीक्रियतां त्वया ।
विधिना निष्फले यत्‍ने न निन्द्यस्त्वं भविष्यसि ॥ (६१८)


சிங்களம் (සිංහල)
උපතෙහිදි ම ලබන - නැති බව නිගා නො වුනත් වැයම් හැර දැමුව - නිගාවක් වේ දැනුම ඇතිවත් (𑇦𑇳𑇪𑇨)

சீனம் (汉语)
失敗於噩運, 不足爲恥; 失敗於不盡力, 乃足爲恥. (六百十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tidak-lah memalukan kalau tuah tidak mengunjongi sa-saorang: tetapi ada-lah satu kehinaan kalau dia menjauhi diri dari ketekunan berusaha.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
불운은비난을받지않는다.비난을받는것은지식과노력의부족이다. (六百十八)

உருசிய (Русский)
Не стыдись неудачи. Истинный позор для мудрого — это отсутствие решимости

அரபு (العَرَبِيَّة)
سوء الحظ ليس بعار ولكنه عار للرجل الذى لا يكد ولا يجهد عمدا (٦١٨)


பிரெஞ்சு (Français)
Ce n'est pas une faute que de n'avoir pas la Bonne Fortune, mais c'est une faute que de s'abstenir de tout effort, lorsqu'on sait toutes qu'il faut savoir.

ஜெர்மன் (Deutsch)
Mangel an gutem Geschick ist für keinen eine Schande - nicht zu wissen, was man wissen sollte, und sich keine Mühe zu geben, das ist Schande.

சுவீடிய (Svenska)
Att missgynnas av ödet är icke klandervärt. Men värt att klandras är att veta sin plikt och dock vara utan dådkraft.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Fortunae favorem deficere nemini vitio est; artem et industriam deficere, vitio est. (DCXVIII)

போலிய (Polski)
Nie jest hańbą, gdy stracę znaczenie i włości. · Hańbą jest, kiedy z tym się pogodzę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22