ஊக்கம் உடைமை

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.   (௫௱௯௰௭ - 597) 

தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்  (௫௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.  (௫௱௯௰௭)
— மு. வரதராசன்


தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.  (௫௱௯௰௭)
— சாலமன் பாப்பையா


உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்  (௫௱௯௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀢𑁃𑀯𑀺𑀝𑀢𑁆𑀢𑀼 𑀑𑁆𑀮𑁆𑀓𑀸𑀭𑁆 𑀉𑀭𑀯𑁄𑀭𑁆 𑀧𑀼𑀢𑁃𑀬𑀫𑁆𑀧𑀺𑀶𑁆
𑀧𑀝𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀸 𑀝𑀽𑀷𑁆𑀶𑀼𑀗𑁆 𑀓𑀴𑀺𑀶𑀼 (𑁖𑁤𑁣𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir
Pattuppaa Toondrung Kaliru
— (Transliteration)


citaiviṭattu olkār uravōr putaiyampiṟ
paṭṭuppā ṭūṉṟuṅ kaḷiṟu.
— (Transliteration)


An elephant pierced by arrows stands unperturbed. The courageous relent not in adversities.

ஹிந்தி (हिन्दी)
दुर्गति में भी उद्यमी, होते नहीं अधीर ।
घायल भी शर-राशि से, गज रहता है धीर ॥ (५९७)


தெலுங்கு (తెలుగు)
ఎదురులేదు పట్టు వదలక ఢీకొన్న
వెనుక దిరుగ దేన్గు విషిఖములకు. (౫౯౭)


மலையாளம் (മലയാളം)
ഗജങ്ങൾ മുറിവേറ്റാലും ധീരമായ് മുന്നിൽ നിന്നിടും; വീഴ്ച വന്നു ഭവിച്ചാലും തളരുന്നില്ല ധൈര്യവാൻ (൫൱൯൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಡಲನ್ನು ಪೂದೆ ಅಂಬುಗಳಿಂದ (ಮಳೆಗರೆದು) ಗಾಯಗೊಳಿಸಿ ಅಚೇತನಗೊಳಿಸಿದರೂ ಆನೆ ತನ್ನ ಧೈರ್ಯದ ನಿಲುವನ್ನು ತಾಳಿಕೊಂಡೇ ಇರುತ್ತದೆ; ಅದೇ ರೀತಿ ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳವರು ಎಲ್ಲ ಕಳೆದುಕೊಂಡರೂ ಅಧೀರರಾಗುವುದಿಲ್ಲ. (೫೯೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
औन्नत्यं न विमुञ्चन्ति बाणविद्धा अपि द्विपा: ।
तद्वदुत्साहवन्तोऽपि न विघ्नाद्विरमन्ति हि ॥ (५९७)


சிங்களம் (සිංහල)
හී පහර ලදුවත් - රණ සුර ගිජිඳුන් මෙන් නො සැලෙත් විපතෙදි - උදක් නිසසල දිරි දරන්නෝ (𑇥𑇳𑇲𑇧)

சீனம் (汉语)
巨象能屹立於飛矢之前; 刚毅之士, 能吃立於挫折之前而不沮喪. (五百九十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Orang yang bersemangat tiada-lah lemah hati-nya bila menemui ke- kechewaan: gajah akan lebeh kuat menghentak kaki-nya ka-tanah bila badan-nya di-tembusi anak panah.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
의지가강한자들은용감한코끼리가화살에관통되는것처럼패배하더라도항상확고하다. (五百九十七)

உருசிய (Русский)
Подобно боевому слону, пронзенному стрелами, но продолжающему сражаться с врагом,,ильные духом не испытывают отчаяния, даже если наступает миг поражения,

அரபு (العَرَبِيَّة)
كما إن الفيل يثبت قوائمه فى الأرض أكثر فأكثر عند ما يطعنه احد بشدة فكذلك أصحاب الحماسة والشهامة لا يرجعون ولا يفشلون عند ما يواجهون الهزيمة (٥٩٧)


பிரெஞ்சு (Français)
L'éléphant se tient plus fermement, lorsqu'il est blessé d'une flèche pénétrante: ainsi l'homme énergique maintient sa grandeur sans se laisser abattre par l’insuccès.

ஜெர்மன் (Deutsch)
Das Stroh bringt keinen Erirag, wenn es geschijnelr wird - der Elefant zeigt seine Größe, wenn er durch herabregnende Pfeile verwundet wird.

சுவீடிய (Svenska)
Liksom elefanten står orubblig fast utsatt för regn av pilar, så ger icke de modiga upp i nederlagets stund.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Q11i magni animi sunt , etiam pereuntes non labant. Elephantus, licet fasce sagittarum feriatur, magnitudinem suam sustinet. · (DXCVII)

போலிய (Polski)
Słoń przed gradem oszczepów i strzał nie umyka, Silnej woli nie złamie przegrana.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பெருமை உடையவர் யார்? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

போர்க்களத்தில் யானை எத்தனை அம்புகளால் தாக்கப்பட்டு புண்பட்ட போதிலும், தளராமல் வேகமாக முன்னேறி சென்று, தன் பெருமையை நிலை நிறுத்துகின்றது.

அதுபோல, எத்தகைய துன்பம் வந்த போதும், ஊக்கம் உடையவர்- உறுதியானவர் மனம் தளராமல், தாம் மேற்கொண்ட காரியத்தை செய்து முடித்துத் தம் பெருமையை நிலைநாட்டுவார்.


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22