கண்ணுக்கு இயற்கையாக அழகு செய்யும் ஆபரணமாக அமைந்திருப்பது கண்ணோட்டம்.
அதாவது, கண்ணின் மூலம் வெளிப்படுத்தும் அன்பு.
அப்படி இல்லை என்றால், அது என்ன?
கண்ணோட்டம் இல்லையானால் அது கண் இல்லை. புண் என்றே உணர வேண்டும்.
புண் உடையவரும் துன்புறுவார்.
அதனைக் காண்பவரும் வேதனைப்படுவார்.
கண்ணோட்டம் இல்லாத கண்ணைப் பெற்றிருப்பவர் பலர்.
அவர்கள் அன்பைப் பெறுவதற்கு பதிலாக, மக்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள் என்று உணர்த்தப்படுகிறது.