கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.   (௫௱௫௰௧ - 551) 

குடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான்  (௫௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.  (௫௱௫௰௧)
— மு. வரதராசன்


குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.  (௫௱௫௰௧)
— சாலமன் பாப்பையா


அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்  (௫௱௫௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁄𑁆𑀮𑁃𑀫𑁂𑀶𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀸𑀭𑀺𑀶𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀢𑁂 𑀅𑀮𑁃𑀫𑁂𑀶𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀅𑀮𑁆𑀮𑀯𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑀼𑀫𑁆 𑀯𑁂𑀦𑁆𑀢𑀼 (𑁖𑁤𑁟𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu
Allavai Seydhozhukum Vendhu
— (Transliteration)


kolaimēṟkoṇ ṭāriṟ koṭitē alaimēṟkoṇṭu
allavai ceytoḻukum vēntu.
— (Transliteration)


More malicious than a murderer is the king Who rules with injustice and oppression.

ஹிந்தி (हिन्दी)
हत्यारे से भी अधिक, वह राजा है क्रूर ।
जो जन को हैरान कर, करे पाप भरपूर ॥ (५५१)


தெலுங்கு (తెలుగు)
కష్టవెట్టునట్టి దుష్టరాజున కన్న
హంతకుండె మెచ్చనైన వాఁడు. (౫౫౧)


மலையாளம் (മലയാളം)
പ്രജകളെ ദ്രോഹിക്കുന്ന നീതിയില്ലാത്തമന്നവൻ കൊലചെയ്തു നടക്കുന്ന ക്രൂരനേക്കാൾ മൃഗീയനാം (൫൱൫൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪ್ರಜೆಗಳನ್ನು ಹಿಂಸಿಸಿ ದಮನ ಮಾಡುತ್ತ, ಧರ್ಮವಲ್ಲದ ಕಾರ್ಯಗಳಲ್ಲಿ ತೊಡಗಿದ ಅರಸನು ಕೊಲೆಗಾರನಿಗಿಂತ ಕೀಳೆನಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾನೆ. (೫೫೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
जनहिंसापरो राजा न्यायातीतपदानुगा: ।
निर्घुणाद् घातकाच्चापि भुवि क्रूरतमो मत: ॥ (५५१)


சிங்களம் (සිංහල)
වැසියනට කරදර - දී රජ කරන මී පල් පවිටු මෙන් කූරිරුය - මිනි මරුවන් හට දෙවැනි නොව (𑇥𑇳𑇮𑇡)

சீனம் (汉语)
王者若壓迫其臣民, 其殘暴更甚於兇手. (五百五十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Amati-lah raja yang menindas ra‘ayat-nya dan menganiaya mereka pula: lebeh kejam-lah ia daripada pembunoh.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
백성을괴롭히는왕은직업상잔인한살인자보다더나쁘다. (五百五十一)

உருசிய (Русский)
Жестокий повелитель, совершающий несправедливые деяния, намного хуже обычных убийц

அரபு (العَرَبِيَّة)
الملك الجائز الذى يجوز على الناس فهو اشد ظلما وجوار من الرجل السفاك (٥٥١)


பிரெஞ்சு (Français)
Le Roi qui. pour extorquer leurs biens, opprime ses sujets et emploie des procédés illégaux est plus cruel que ceux qui tuent par haine.

ஜெர்மன் (Deutsch)
Grausamer als solche, die auf Mörderpfad sind, is der König, der unterdrückt und Ungerechrigkeit übt.

சுவீடிய (Svenska)
Värre än mördare är den konung som förtrycker sitt folk och gör vad ont är.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Iis, qui eaedem tractant, crudelior est rex , qui vexationem exer- cens injuste agit. (DLI)

போலிய (Polski)
Król, co państwo obdziera, by poić swą żądzę, Gorszy jest niźli zwykły morderca,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22