சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.   (௫௱௨௰௧ - 521) 

ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்  (௫௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.  (௫௱௨௰௧)
— மு. வரதராசன்


ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.  (௫௱௨௰௧)
— சாலமன் பாப்பையா


ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்  (௫௱௨௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀶𑁆𑀶𑀶𑁆𑀶 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀧𑀵𑁃𑀫𑁃𑀧𑀸 𑀭𑀸𑀝𑁆𑀝𑀼𑀢𑀮𑁆
𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑀡𑁆𑀡𑁂 𑀉𑀴 (𑁖𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Patratra Kannum Pazhaimaipaa Raattudhal
Sutraththaar Kanne Ula
— (Transliteration)


paṟṟaṟṟa kaṇṇum paḻaimaipā rāṭṭutal
cuṟṟattār kaṇṇē uḷa.
— (Transliteration)


Only the kindred, because of their old contact, Show attachment even in adversity.

ஹிந்தி (हिन्दी)
यद्यपि निर्धन हो गये, पहले कृत उपकार ।
कहते रहे बखान कर, केवल नातेदार ॥ (५२१)


தெலுங்கு (తెలుగు)
లేమి నున్న ప్రేమను పాటించు
వారివలన బంధువర్గ ముండు. (౫౨౧)


மலையாளம் (മലയാളം)
ഒരുത്തൻ കാലദോഷത്താൽ ദാരിദ്ര്യത്തിൽ പതിക്കിലും മുൻകാലസ്നേഹബന്ധങ്ങൾ സ്വജനങ്ങളിൽ കാണലാം (൫൱൨൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನ ಸಿರಿ ಅಳಿದ ಮೇಲೂ, ಅವನ ಹಳೆಯ ಸಂಬಂಧವನ್ನು ನೆನೆಸಿ ಕೊಂಡಾಡುವುದು ಬಂಧುಗಳಲ್ಲಿ ಇರುತ್ತದೆ. (೫೨೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
नष्टायामपि सम्पत्तौ सम्बन्धं पूर्वकालिकम् ।
स्मृत्वैव श्लाघनं लोके बन्धुलक्षणमुच्यते ॥ (५२१)


சிங்களம் (සිංහල)
මෙනෙහි කර ඉ පැරණි - හිතවත් කමෙහි දැවටී නිරත වෙත් පසු පස - නෑ සියෝ දන හිත වුවත් (𑇥𑇳𑇫𑇡)

சீனம் (汉语)
患難之際, 惟親屬可相賴. (五百二十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perhubongan yang kukoh, walau pun di-waktu malang, hanya ter- dapat di-antara kaum keluarga.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
모든재산을잃을수있다; 하지만친척은영광스러운과거를찬양한다. (五百二十一)

உருசிய (Русский)
Былая дружба обнаруживается в минуты утраты дружбы лишь в кругу друзей

அரபு (العَرَبِيَّة)
الإتصال الدائم ولو فى حالة الضراء يستحق به اقاربه فقط (٥٢١)


பிரெஞ்சு (Français)
Témoigner l'ancien attachement, à celui qui est abandonné par la fortune ne se rencontre que chez les parents.

ஜெர்மன் (Deutsch)
Alie Liebe zu zeigen, auch wenn der Reichtum gegangen ist, ist nur eine Eigenschaft der Angehörigen.

சுவீடிய (Svenska)
Även sedan man har blivit utblottad blir man omhuldad som förut av sina släktingar.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etsi quis ad inopiam redactus sit, antiquue conditionis observan-tiam in consanguineis invcnies. (DXXI)

போலிய (Polski)
Człowiek ma w przyjaciołach i krewnych podporę Na dnie nędzy jak też w dobrobycie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22