தெரிந்து வினையாடல்

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.   (௫௱௰௫ - 515) 

செய்யும் செயலைப் பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது  (௫௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.  (௫௱௰௫)
— மு. வரதராசன்


செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.  (௫௱௰௫)
— சாலமன் பாப்பையா


ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது  (௫௱௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀸𑀶𑁆𑀶𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀺𑀶𑁆𑀧𑀸𑀶𑁆𑀓𑀼 𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆 𑀯𑀺𑀷𑁃𑀢𑀸𑀷𑁆
𑀘𑀺𑀶𑀦𑁆𑀢𑀸𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀏𑀯𑀶𑁆𑀧𑀸𑀶𑁆 𑀶𑀷𑁆𑀶𑀼 (𑁖𑁤𑁛𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Arindhaatrich Cheykirpaarku Allaal Vinaidhaan
Sirandhaanendru Evarpaar Randru
— (Transliteration)


aṟintāṟṟic ceykiṟpāṟku allāl viṉaitāṉ
ciṟantāṉeṉṟu ēvaṟpāṟ ṟaṉṟu.
— (Transliteration)


Where knowledge and diligence are required, Don't entrust tasks on personal loyalty.

ஹிந்தி (हिन्दी)
जो करता है धैर्य से, खूब समझ सदुपाय ।
उसे छोड़ प्रिय बन्धु को, कार्य न सौंपा जाय ॥ (५१५)


தெலுங்கு (తెలుగు)
పనితనమ్ము దెలిసి ప్రతిబంధముల కోర్చు
సాహసుండె కార్యసాధకుండు. (౫౧౫)


மலையாளம் (മലയാളം)
പൂർണ്ണമായ് വേല ചെയ്‌വാനായ് കഴിവുള്ളവരല്ലാതെ യോഗ്യരെന്ന് നിനപ്പോരെ ജോലിക്ക് നിയമിച്ചിടാ (൫൱൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕೆಲಸವನ್ನು ಚೆನ್ನಾಗಿ ತಿಳಿದು ಸಮರ್ಥವಾಗಿ ಎದುರಿಸಬಲ್ಲವನಿಗಲ್ಲದೆ, ತನಗೆ ಬೇಕಾದವನೆಂದು ಒಬ್ಬನನ್ನು ಆ ಕೆಲಸಕ್ಕೆ ನೇಮಿಸಬಾರದು. (೫೧೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
बुध्वोपायं विघ्नराशिमपोह्य कृतिसाधने ।
समर्थमन्तरा नान्यं राजकार्ये निवेशयेत् ॥ (५१५)


சிங்களம் (සිංහල)
හොඳින් දැන විමසා - කටයුතූ කරනුනට මිස අනිකකූට හොඳයයි - හිතැඟි කටයුතූ නො පැවරිය යුතූ (𑇥𑇳𑇪𑇥)

சீனம் (汉语)
用人應重賢否, 莫因偏愛而下決斷. (五百十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tugas perlu-lah di-berikan kapada orang2 yang mempunyai penge- tahuan keahhan dan kesanggupan untok berikhtiar dengan sabar, dan bukan-lah kerana orang2 itu sukakan kamu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
마음에드는사람을채용해서는안되고일을진행하는방법을알고있는사람을채용해야한다. (五百十五)

உருசிய (Русский)
Не доверяй службу человеку, который считает своего хозяина непогрешимым. Доверяй дела лишь тому, кто познал дело и с тщанием исполняет его

அரபு (العَرَبِيَّة)
عين رجلا لخدمتك الذى يملك العلم والتجربة ويقدر على الجهد المتواصل ولتكن الموهبة لا المحبة العـمياء إليك ميزان الإنتخاب (٥١٥)


பிரெஞ்சு (Français)
Ne peut être employé que celui qui connaît les devoirs de sa charge et s'efforce de s'en acquitter avec patience et non celui qui a seulement de l'affection (pour l'employeur).

ஜெர்மன் (Deutsch)
Um etwas auszuführen, bevollmächtige niemals einen aus Zuneigung, sondern nur aufgrund von Weisheit und Ausdauer.

சுவீடிய (Svenska)
Konungens uppdrag bör ges åt den som äger insikt och tålamod. Det är ej av sådant slag att det kan ges på subjektiva grunder av vänskap eller bekantskap.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ei soli, qui scienter agatet patienter-non ubi dicitur ,,optimus" - munus iujungi debet. (DXV)

போலிய (Polski)
Bez uprzedzeń więc musisz podchodzić do ludzi, Możliwości ich trafnie oceniać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22