மிகுந்த பலம் பொருந்திய யானை சேற்று நிலத்தில் நடக்க முடியாது.
நிலத்தில் வாழும் சிறு நரி பலமில்லாத சிறிய விலங்கு. அச்சம் இன்னதென்றறியாது வேல் தாங்கி நின்ற போர் வீரர்களை தன்னுடைய தந்தங்களால் குத்தித் தூக்கி கொண்டு யானை சேற்று நிலத்தில் வருமாயின் சிறு நரியும் கொன்றுவிடும்.
அதுபோல, வீரமும் பெருமையும் உடையவர் எவ்வளவு. சாதனங்களைக் கொண்டு இருந்தாலும் வெற்றி காண்பதற்கான இடம் சரியாக அமைய வேண்டும். இல்லையானால் வெற்றி பெற முடியாது.