இடன் அறிதல்

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.   (௪௱௯௰௨ - 492) 

மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும்  (௪௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.  (௪௱௯௰௨)
— மு. வரதராசன்


பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.  (௪௱௯௰௨)
— சாலமன் பாப்பையா


வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்  (௪௱௯௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀭𑀡𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢 𑀫𑁄𑁆𑀬𑁆𑀫𑁆𑀧𑀺 𑀷𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀭𑀡𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀫𑁆
𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀧𑀮𑀯𑀼𑀦𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁣𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam
Aakkam Palavun Tharum
— (Transliteration)


muraṇcērnta moympi ṉavarkkum araṇcērntām
ākkam palavun tarum.
— (Transliteration)


A fortress gives numerous advantages Even to men of strength and valour.

ஹிந்தி (हिन्दी)
शत्रु-भाव से पुष्ट औ’, जो हों अति बलवान ।
उनको भी गढ़-रक्ष तो, बहु फल करे प्रदान ॥ (४९२)


தெலுங்கு (తెలుగు)
బహువిధాల మేలు బగతుర బరిమార్ప
దుర్గమందె గెలువు దొఱకునేని. (౪౯౨)


மலையாளம் (മലയാളം)
ശക്തിയിലദ്വീതിയൻതാനെന്നു ലോകം ഗണിക്കിലും രോധിയായുതകും കോട്ടക്കേകണം പൂർണ്ണരക്ഷണം (൪൱൯൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಯುದ್ದಕುಶಲಿಗಳಾದ ಶಕ್ತಿವಂತರಿಗೂ, ಭದ್ರವಾದ ಕೋಟೆಯ ರಕ್ಷಣೆಯಿದ್ದರೆ, ಅದರಿಂದುಂಟಾಗುವ ಲಾಭಗಳು ಹಲವು. (೪೯೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सुरक्षितस्थलस्थेन विशिष्टबलशालिना ।
यो जय: प्राप्यते राज्ञा स तु सर्वार्थसाधक: ॥ (४९२)


சிங்களம் (සිංහල)
බලවත් වුව රජුන් - බලකොටුවකින් පිරිපුන් නො ලැබිය හැකි අරුම - ලැබිය හැකි ජය කෙහෙලි ඔස්සේ (𑇤𑇳𑇲𑇢)

சீனம் (汉语)
卽勇猛有力之士, 亦利用險要. (四百九十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ada-lah satu keuntongan yang amat besar, walau pun bagi mereka yang kuat, untok mendapat kedudokan di-tempat yang berkubu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
막강한힘이있는자라도강력한요새를가지고있으면큰이득이다. (四百九十二)

உருசிய (Русский)
Обладание мощной крепостью даст тебе огромное преимущество, в особенности,,сли ты уже обладаешь армией и достаточной воинственностью

அரபு (العَرَبِيَّة)
إنه لمفيد جدا حتى للقوياء وذى السلطة إن يحاربو أعدائهم من مقاعد الحصون الحصينة المتينة (٤٩٢)


பிரெஞ்சு (Français)
A l'armée dont la force est dissimulée (à l'ennemi), l'appui d'une place fortifiée donne de nombreux avantages.

ஜெர்மன் (Deutsch)
Seibst für den Mann mit Macht bringt die Stäcke der Festung viele Vorteile.

சுவீடிய (Svenska)
Även för dem som är väl förfarna i bitter strid är det en stor tillgång att förfoga över en befäst plats.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etiam ei, qui cum ardore pugnandi coujungit validas vires, cum arce conjunctum praesidium multa emolumenta afferet. (CDXCII)

போலிய (Polski)
Każdy król - choćby wręcz najsilniejszy z monarchów Musi mieć łańcuch twierdz dla obrony.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22