காலம் அறிதல்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.   (௪௱௮௰௯ - 489) 

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்  (௪௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.  (௪௱௮௰௯)
— மு. வரதராசன்


அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.  (௪௱௮௰௯)
— சாலமன் பாப்பையா


கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்  (௪௱௮௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀬𑁆𑀢𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀢𑀼 𑀇𑀬𑁃𑀦𑁆𑀢𑀓𑁆𑀓𑀸𑀮𑁆 𑀅𑀦𑁆𑀦𑀺𑀮𑁃𑀬𑁂
𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁕𑁤𑁢𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye
Seydhar Kariya Seyal
— (Transliteration)


eytaṟ kariyatu iyaintakkāl annilaiyē
ceytaṟ kariya ceyal.
— (Transliteration)


Hesitate not to seize opportunities rare, And achieve tasks otherwise hard.

ஹிந்தி (हिन्दी)
दुर्लभ अवसर यदि मिले, उसको खोने पूर्व ।
करना कार्य उसी समय, जो दुष्कर था पूर्व ॥ (४८९)


தெலுங்கு (తెలుగు)
సాధక మగునపుడె సాధింపవలయును
సాధ్యపడున దెల్ల సత్యరముగ. (౪౮౯)


மலையாளம் (മലയാളം)
സന്ദർഭം വിരളം തന്നെ; വന്നുചേരുന്നതാകുകിൽ സത്വരം വേണ്ട കാര്യങ്ങൾ നിർവഹിച്ചിടണം പുമാൻ (൪൱൮൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ದುರ್ಲಭವಾದ ಕಾಲವು ಒದಗಿಬಂದಾಗ, ಅದರ ಲಾಭವನ್ನು ಪಡೆದುಕೊಂಡು ಮಾಡಲು ಅಸಾಧ್ಯವಾದ ಕಾರ್ಯಗಳನ್ನೆಲ್ಲ ಮಾಡಿ ಮುಗಿಸಬೇಕು. (೪೮೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कालेऽनुकूले सम्प्राप्ते तमलभ्यं विभाव्य च ।
तदैव कुरु कर्तव्यं तं कालं न हि द्रक्ष्यसि ॥ (४८९)


சிங்களம் (සිංහල)
නො ලැබිය හැකි අරුම - අවසරය ලත් කෙනෙහිම කිරිමට අපහසු - කිරියයන් කළ යුතූය නිසිසේ (𑇤𑇳𑇱𑇩)

சீனம் (汉语)
機會如黃金, 一旦得之, 莫事遅疑, 無遒而不可也. (四百八十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bila peluang luar biasa terdedah di-hadapan-mu, usah-lah di-nantikan lagi, chuba-lah terus biar pun untok menchapai yang mustahil.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
드문기회가오면, 바로보기드문행동을해야한다. (四百八十九)

உருசிய (Русский)
Если настает миг добиться желаемого,,ез колебаний спеши достичь его

அரபு (العَرَبِيَّة)
لا تتردد ولا تتذبذب إذا تيسرت لك فرصة نادرة من الخجوم على أعدائك فانك تغلب عليهم ولوكان الفتح مستحيلا (٤٨٩)


பிரெஞ்சு (Français)
Le temps propice arrivé, il faut en profiter pour tenter même l'impossible.

ஜெர்மன் (Deutsch)
Erscheint der richtige Augenblick - nütze ihn und tu, was selten zu erreichen ist!

சுவீடிய (Svenska)
Om du råkar få ett sällsynt tillfälle så grip det genast och uträtta stora ting.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si se offerant, quae obtentu sunt difficilia, quae factu sunt diffi-cilia, facias. (CDLXXXIX)

போலிய (Polski)
Gdy zabłyśnie okazja największej wygranej, Zdziałaj to, czego człowiek nie zdoła.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22