சிற்றினம் சேராமை

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.   (௪௱௫௰௨ - 452) 

நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும்; அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும்  (௪௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.  (௪௱௫௰௨)
— மு. வரதராசன்


தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.  (௪௱௫௰௨)
— சாலமன் பாப்பையா


சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்  (௪௱௫௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀺𑀬𑀮𑁆𑀧𑀸𑀮𑁆 𑀦𑀻𑀭𑁆𑀢𑀺𑀭𑀺𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀸𑀓𑀼𑀫𑁆 𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀇𑀷𑀢𑁆𑀢𑀺𑀬𑀮𑁆𑀧 𑀢𑀸𑀓𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀼 (𑁕𑁤𑁟𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nilaththiyalpaal Neerdhirin Thatraakum Maandharkku
Inaththiyalpa Thaakum Arivu
— (Transliteration)


nilattiyalpāl nīrtirin taṟṟākum māntarkku
iṉattiyalpa tākum aṟivu.
— (Transliteration)


Nature of soil governs the quality of water. One's wisdom by the nature of company.

ஹிந்தி (हिन्दी)
मिट्टी गुणानुसार ज्यों, बदले वारि-स्वभाव ।
संगति से त्यों मनुज का, बदले बुद्धि-स्वभाव ॥ (४५२)


தெலுங்கு (తెలుగు)
నేల నంటి యుండు నీటిరంగును బోలు
కూడు వారినంటి గుణములుండు. (౪౫౨)


மலையாளம் (മലയാളം)
നിലത്തിൻ ഗുണമേന്മക്ക് ചേർന്നതാമുറയും ജലം; മനുജന്നറിവും താൻ ചേർന്നാളും വംശത്തിനൊത്തതാം (൪൱൫൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನೆಲದ ಗುಣದಿಂದ (ಹರಿಯುವ) ನೀರಿನ ಗುಣವೂ ಬದಲಾಗುತ್ತದೆ; ಅದೇ ರೀತಿ ಮನುಷ್ಯನ ತಿಳಿವಳಿಕೆ ಕೂಡ ಒಡನಾಟದ ಗುಣವನ್ನು ಹೊಂದಿಕೊಂಡಿರುತ್ತದೆ. (೪೫೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
भूगतं सलिलं भूमिभेदाद् भिन्नरसं यथा ।
तथा नर: सङ्गभेदाद् भिन्नभिन्नमतिर्भवेत् ॥ (४५२)


சிங்களம் (සිංහල)
ගූණ අනුව පොළවේ - ජලගූණ වෙනස් වන මෙන් ඇසුර මිනිසුන්ගේ - අනුව නැණ ගූණ පරස් පර වේ (𑇤𑇳𑇮𑇢)

சீனம் (汉语)
泉水流行於土壤中而易其味; 人性亦習染於其所交遊也. (四百五十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ayer bertukar dan mengambil watak tanah di-mana ia mengalir: bagitu-lah juga keperibadian manusia mengambil warna dari per- kumpulan yang di-champori-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
토질에따라수질이변경되는것과마찬가지로, 사람의본질은그우정에따라변경된다. (四百五十二)

உருசிய (Русский)
Качество воды зависит от земли, по которой она течет. Точно также и ценность людей зависит от качества их дружбы

அரபு (العَرَبِيَّة)
كما أن الماء ستغير ويختالون الأرض التى يجرى فيها الماء فكذلك أذهان الناس تتغير وتتبدل بمثل من يصاحبونهم (٤٥٢)


பிரெஞ்சு (Français)
L'eau est altérée par la nature du sol qu'elle traverse et prend les propriétés de celui-ci : de même, l'intelligence des hommes est altérée par ceux qu'ils fréquentent' et s'approprie leurs caractères.

ஜெர்மன் (Deutsch)
Ebenen wie die Beschaffenheit des Südens das Wasser verändere - der Charakter des Menschen ändern sich wie seine Freundschaften.

சுவீடிய (Svenska)
Liksom vattnet påverkas av jordmånen påverkas människors karaktär av deras umgänge.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Aqua natura humi alia fit eique similis: animus lmmanus naturam iuduit consuetudine sibi conjunctorum (CDLII)

போலிய (Polski)
Woda z gleby zbrukanej nabiera złej woni Człowiek cechy kompanów przybiera.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பெருந்தன்மையும் சிறுமையும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

தண்ணீருக்குத் தனி நிறமும், ருசியும் இல்லை.

என்றாலும், அது ஓடி வருகின்றது அல்லது ஊறுகின்ற மண்ணின் இயல்புக்கு ஏற்றவாறு, நிறமும், ருசியும் பெறுகிறது.

அதாவது, செம்மண்ணில் ஓடினால் சிவப்பாகவும், கருப்பு மண்ணில் ஓடினால் கருப்பாகவும் மாறுகிறது. மேலும் அந்த நிலத்தின் சுவையையும் பெறுகிறது.

அதுபோல, மக்களுக்கும், அவரவர் சார்ந்திருக்கின்ற இடத்திற்கு ஏற்றவாறு குணங்கள் (அறிவு) மாறுபடும்.

உயர்ந்தோர் இடத்தில் சேர்ந்து இருந்தால், அவரது பெருந்தன்மையும், வந்து ஓரிடத்தில் சேர்ந்து இருந்தால், அவரது சிறுமையும் அமைந்துவிடுகின்றன.

எனவே, உயர்ந்தோர் சேர்க்கை மிகவும் முக்கியம் என்ற உண்மை தெளிவாகிறது.


நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22