அறிவுடைமை

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.   (௪௱௨௰௮ - 428) 

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்  (௪௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.  (௪௱௨௰௮)
— மு. வரதராசன்


பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.  (௪௱௨௰௮)
— சாலமன் பாப்பையா


அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்  (௪௱௨௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀜𑁆𑀘𑀼𑀯 𑀢𑀜𑁆𑀘𑀸𑀫𑁃 𑀧𑁂𑀢𑁃𑀫𑁃 𑀅𑀜𑁆𑀘𑀼𑀯𑀢𑀼
𑀅𑀜𑁆𑀘𑀮𑁆 𑀅𑀶𑀺𑀯𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 (𑁕𑁤𑁜𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil
— (Transliteration)


añcuva tañcāmai pētaimai añcuvatu
añcal aṟivār toḻil.
— (Transliteration)


It is folly not to fear what ought to be feared. The wise dread what ought to be dreaded.

ஹிந்தி (हिन्दी)
निर्भयता भेतव्य से, है जड़ता का नाम ।
भय रखना भेतव्य से, रहा सुधी का काम ॥ (४२८)


தெலுங்கு (తెలుగు)
లొంగ దగిన చోట లొంగుటే జ్ఞానమ్ము
మూర్ఖుఁ డెదురు దిరుగు ముప్పుఁగనక. (౪౨౮)


மலையாளம் (മലയാളം)
ഭയപ്പെടേണ്ടും കാര്യങ്ങൾ ഭയന്നീടുന്നു ജ്ഞാനികൾ ഭയപ്പെടാതിരിക്കുന്നോരജ്ഞരെന്നത് നിശ്ചയം (൪൱൨൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅಂಜಬೇಕಾದ ವಿಷಯಗಳಲ್ಲಿ ಹೆದರದಿರುವುದು ಮೂರ್ಖತನವೆನ್ನಿಸುವುದು; ಅಂಜಬೇಕಾದ ವಿಷಯಗಳಲ್ಲಿ ಅಂಜಿ ನಡೆದುಕೊಳ್ಳುವುದೇ ಅರಿವುಳ್ಳವರ ಧರ್ಮ. (೪೨೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
ये न बिभ्यति ते मूढा दुष्कृत्यात् पापभीतिदात् ।
भीरुता पापकृत्येषु धीमतां प्रकृतिर्भवेत् ॥ (४२८)


சிங்களம் (සිංහල)
බිය වියයුතූ තන්හි - බියවෙත් නුවණ ඇත්තෝ බිය නොවනු දදකම - එසේ බිය වියයුතූ තැනෙකදී (𑇤𑇳𑇫𑇨)

சீனம் (汉语)
危而不避, 愚也; 危而避之, 智也. (四百二十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Dungu-lah orang yang membuta tuli menerkam bahaya: ada-lah sa- bahagian daripada kebijaksanaan untok takut kapada apa yang sa- harus-nya di-takutkan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
두려워해야할것을두려워하지않는것은어리석은짓이다; 두려워해야할것은두려워하는것이현명하다. (四百二十八)

உருசிய (Русский)
Истинная глупость не боится того, чего надо бояться. Истинная мудрость состоит в том, чтобы бояться того, чего следует бояться

அரபு (العَرَبِيَّة)
إنه لخطأ أن يواجه أحد الخطر مباشرة و اصحاب الفهم السليم يخافون مما لا بد أن يخاف منه (٤٢٨)


பிரெஞ்சு (Français)
Ne pas craindre ce qui doit être craint, c'est la sottise. Craindre ce qui doit être craint est au contraire, le propre des hommes intelligents.

ஜெர்மன் (Deutsch)
Nicht zu fürchten, was gefürchtet werden muß, ist dumm - zu fürchren, was geiurchtet werden muß, ist weise.

சுவீடிய (Svenska)
Att icke frukta det som bör fruktas är enfald. Att frukta det som bör fruktas är vishet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Metucnda non metuere est stultitia; metueuda metucre munus sapientium est (CDXXVIII)

போலிய (Polski)
Głupiec się bez potrzeby wystawia na ciosy, Mądry zmartwień zbytecznych unika.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22