கேள்வி

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.   (௪௱௰௯ - 419) 

நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்  (௪௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.  (௪௱௰௯)
— மு. வரதராசன்


நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.  (௪௱௰௯)
— சாலமன் பாப்பையா


தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது  (௪௱௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀼𑀡𑀗𑁆𑀓𑀺𑀬 𑀓𑁂𑀴𑁆𑀯𑀺𑀬 𑀭𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀬
𑀯𑀸𑀬𑀺𑀷 𑀭𑀸𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁕𑁤𑁛𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu
— (Transliteration)


nuṇaṅkiya kēḷviya rallār vaṇaṅkiya
vāyiṉa rātal aritu.
— (Transliteration)


A modest mouth is hard for those Whose ears lend not to wise counsels.

ஹிந்தி (हिन्दी)
जिन लोगों को है नहीं, सूक्ष्म श्रवण का ज्ञान ।
नम्र वचन भी बोलना, उनको दुष्कर जान ॥ (४१९)


தெலுங்கு (తెలుగు)
శ్రద్ధగాను వినని దధ్ధమ్ము లేవ్వరు
వినగఁ జెప్పలేరు వినయ మొప్ప. (౪౧౯)


மலையாளம் (മലയാളം)
ശ്രേഷ്ഠമാകിയ തത്വങ്ങൾ ശ്രവിച്ചു പഴകാത്തവർ നന്മയാം വാർത്തകൾ ചൊൽവാൻ കെൽപ്പില്ലാത്തവരായിടും (൪൱൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸುಸಂಸ್ಕೃತ ವಿಚಾರಗಳನ್ನು ಕೇಳರಿಯದವರು, ವಿನಯಪರವಾದ ಮಾತುಗಳನ್ನಾಡುವುದು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. (೪೧೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अपूर्वसूक्ष्मशास्त्रार्थश्रवणं यै: सदा कृतम् ।
ते विनीतवचोयुक्ता भवेयु र्न तथा परे ॥ (४१९)


சிங்களம் (සිංහල)
කමණීය පිවිතූරු - කන්කලු හිතැඟි තෙපලුම සියුම් දැනුමක් ඇති - අයට මිස අනිකකූට නොහැකිය (𑇤𑇳𑇪𑇩)

சீனம் (汉语)
耳不聞敎者, 口不易出謙辭也. (四百十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Berbichara dengan rendah hati sulit-lah di-perolehi oleh mereka yang tidak mendengar kata2 halus dari orang bijaksana.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
유식한자의강연을결코경청하지않는자는겸손한연설을할수없다. (四百十九)

உருசிய (Русский)
Люди, которые не в состоянии склонять ухо к мудрым истинам,,е могут быть почтительными и скромными в своих речах

அரபு (العَرَبِيَّة)
التواضع فى الكلام حصوله صعب لرجل الذى لا يستمع إلى النصائح من الحكماء (٤١٩)


பிரெஞ்சு (Français)
Ceux qui n'ont pas l'oreille délicate ne peuvent avoir le langage respectueux.

ஜெர்மன் (Deutsch)
Feh k das feine Wissen zum Hinhören, fällt es schwer, liebenswürdige Wnrte zu sprechen.

சுவீடிய (Svenska)
Sällsynt är att finna folk med vördsamt tal bland dem som har försummat att inhämta högre lärdom.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quorum auris acute dicta numquam audivit, ut ii modcstum os cousequantur, vix potest fieri (CDXIX)

போலிய (Polski)
Dufny w sobie, niegrzeczny, zaczepność ma w głosie, Choćby starał się mówić uczenie...
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22