கேள்வி

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.   (௪௱௰௮ - 418) 

கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும்  (௪௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.  (௪௱௰௮)
— மு. வரதராசன்


கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.  (௪௱௰௮)
— சாலமன் பாப்பையா


இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்  (௪௱௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁂𑀝𑁆𑀧𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑁂𑀴𑀸𑀢𑁆 𑀢𑀓𑁃𑀬𑀯𑁂 𑀓𑁂𑀴𑁆𑀯𑀺𑀬𑀸𑀮𑁆
𑀢𑁄𑀝𑁆𑀓𑀧𑁆 𑀧𑀝𑀸𑀢 𑀘𑁂𑁆𑀯𑀺 (𑁕𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi
— (Transliteration)


kēṭpiṉuṅ kēḷāt takaiyavē kēḷviyāl
tōṭkap paṭāta cevi.
— (Transliteration)


Ears may hear and yet remain deaf, If not drilled by words of instruction.

ஹிந்தி (हिन्दी)
श्रवण श्रवण करके भला, छिद न गये जो कान ।
श्रवण-शक्ति रखते हुए, बहरे कान समान ॥ (४१८)


தெலுங்கு (తెలుగు)
వీనులనఁగఁ జెల్లు వినదగ్గవే విన్న
చెడుగు విన్నఁ జెవులు చిల్లులగును. (౪౧౮)


மலையாளம் (മലയാളം)
വിജ്ഞാനദ്ധ്വനികേറാത്ത കർണ്ണങ്ങൾ ധ്വാനമേൽക്കിലും ഓട്ടയില്ലാതെ, ബാധിര്യം ബാധിച്ചതിന് തുല്യമാം (൪൱൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕೇಳಿ, ಕೇಳಿ ಸಂಸ್ಕಾರಗೊಳ್ಳದ ಕಿವಿ, ಇದ್ದೂ ಕಿವುಡಾದಂತೆ. (೪೧೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
शास्त्रश्रवणमात्रेण श्रोत्रं भवति सार्थकम् ।
ग्राहकं त्वन्यशब्दानां श्रोत्रं बाधिर्यवन्मतम् ॥ (४१८)


சிங்களம் (සිංහල)
ඇසුමෙන් පලනොගෙන- නෑසුන පරිදි සිටිනා දුහුනන් සතූ සවන් - ඇසෙන මුත් බිහිරිවුවා වැනි (𑇤𑇳𑇪𑇨)

சீனம் (汉语)
耳不聞敎者, 卽同於聲矣. (四百十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tuli-lah telinga yang tidak menerima kata2 ajaran yang bijaksana, biar pun telinga itu mendengar sa-benar-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
좋은것을듣는것이습관이아닌귀는, 소리를들을수있더라도, 청각장애로간주되리라. (四百十八)

உருசிய (Русский)
Глухое для мудрых речей ухо, даже внимательно слушая их, не в состоянии услышать эти речи

அரபு (العَرَبِيَّة)
إنه لصم حقا الذى لا يملك أذنيه عن كلمات النصائح بالفهم الثاقب (٤١٨)


பிரெஞ்சு (Français)
L'oreille où n'a pas pénétré l'enseignement entend des sons mais est insensible en réalité.

ஜெர்மன் (Deutsch)
Obschon es hört, ist es taub - das, Ohr, das nicht vom Hören durchbohrt wird.

சுவீடிய (Svenska)
Såsom dövt, även om det kan höra, är det öra som icke tar lärdom av visdomens ord.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Auris, quae audiendo non est' perforata, quumvis audiat, couditio- nem habet, ut non audiat. (CDXVIII)

போலிய (Polski)
Niewrażliwy na racje jest głuchym podobny, Mądre słowo się doń nie dostanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செவியினால் ஏற்படும் நன்மை — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மனிதனுக்கு காதுகள் இருப்பது எதற்காக? உண்மையான கேள்வி அறிவை பெறுவதற்காகவே காதுகள் அமைந்துள்ளன.

காதுகள் இருந்தும், கேள்வி அறிவை பெறக்கூடிய ஆர்வம் ஒருவனுக்கு இல்லை என்றால், அவனைப் பற்றி என்ன நினைப்பது என்றால், அப்படிப்பட்டவனின் காதுகளுக்கு வேறு எல்லா ஒலிகளை கேட்கும் தன்மை இருந்தாலும், அவை செவிட்டு தன்மை உள்ளனவே. அதாவது, அவன் செவிடனே!

எங்கேயாவது எவராவது உரக்கப் பேசினால் அல்லது பலமான ஓசை கேட்டால் காதைத் தொளைக்கிறது என்று கூறுகிறோம். அதுபோல, அறிவு மொழிகள் துளைக்கப்படாத செவி என்று உணர்த்தப்படுகிறது.


கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22