கேள்வி

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.   (௪௱௰௭ - 417) 

நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்  (௪௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.  (௪௱௰௭)
— மு. வரதராசன்


நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.  (௪௱௰௭)
— சாலமன் பாப்பையா


எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்  (௪௱௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑁂𑀢𑁃𑀫𑁃 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸 𑀭𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑀼𑀡𑀭𑁆𑀦𑁆
𑀢𑀻𑀡𑁆𑀝𑀺𑀬 𑀓𑁂𑀴𑁆𑀯𑀺 𑀬𑀯𑀭𑁆 (𑁕𑁤𑁛𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa
RizhaiththunarnTheentiya Kelvi Yavar
— (Transliteration)


piḻaittuṇarntum pētaimai collā riḻaittuṇarn
tīṇṭiya kēḷvi yavar.
— (Transliteration)


Those who have sought and heard much Will not talk nonsense even by mistake.

ஹிந்தி (हिन्दी)
जो जन अनुसंधान कर, रहें बहु-श्रुत साथ ।
यद्यपि भूलें मोहवश, करें न जड़ की बात ॥ (४१७)


தெலுங்கு (తెలుగు)
విన్న దానియందు విషయమ్ము లేకున్న
గొప్పవారు దాని జెప్పరెత్తి. (౪౧౭)


மலையாளம் (മലയാളം)
കേട്ടുമന്വേഷനത്താലും വിജ്ഞാനം നേടിയുള്ളവർ പൂർണ്ണധാരണയില്ലേലും ചൊല്ലാ വിഡ്ഢിത്തമേകദാ (൪൱൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
(ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿ) ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಅರಿತು, ಬೇರೆಯವರಿಂದಲೂ ಕೇಳಿ ತಿಳಿದುಕೊಂಡವರು, ಒಂದು ವಿಷಯವನ್ನು ತಪ್ಪಾಗಿ ಗ್ರಹಿಸಿದ್ದರೂ, ಅದನ್ನು ವ್ಯಕ್ತಪಡಿಸುವಾಗ ದಡ್ಡತನವನ್ನು ತೋರುವುದಿಲ್ಲ. (೪೧೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
बहुश्रुता बहुज्ञाश्च सन्तो मोहवशात् कचित् ।
अजानन्तोऽपि याथार्थ्ये न ब्रूयुर्मोहदं वच: ॥ (४१७)


சிங்களம் (සිංහල)
විමසන ගූණය සහ - පිරිපුන් දැනුම් ඇති අය නො පැහැදිලි අදහස් - වුවද නැණවත් පරිදි තෙපලත් (𑇤𑇳𑇪𑇧)

சீனம் (汉语)
聞道而深思之士, 縱在疏忽之頃, 亦不出愚昧之言. (四百十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Amati-lah orang yang telah banyak bersemadi di-dalam diri-nya dan telah banyak pula mengumpul ajaran2 dari perbicharaan orang2 yang bijaksana: dia tidak akan berbichara kosong walau pun di-waktu kesilapan-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
학자들은제대로파악하지않더라도, 어리석게말하지않으리라. (四百十七)

உருசிய (Русский)
Люди, которые могут прислушиваться и постигать мудрые мысли, никогда не произнесут глупостей, даже если не так истолкуют эти мысли

அரபு (العَرَبِيَّة)
الرجال من ذوى الفهم الثاقب الذين يدخرون للأنفسهم من النصائح من الحكما لا يتفوهون لكلمات فارغة ولوخطأ (٤١٧)


பிரெஞ்சு (Français)
Ceux qui ont examiné et saisi le sens délicat ( des choses ) et qui en ont discuté avec les sages ne disent pas des paroles qui trahissent l'ignorance, même lorsqu'ils ont mal compris.

ஜெர்மன் (Deutsch)
Ist auch ihr Verstehen unvullkummeiK reden sie doch nicht dumm daher - jene mir feinstem Wissen und beständig scharfem Hinhören.

சுவீடிய (Svenska)
De som har studerat och lärt sig mycken visdom förmår icke ens i misshugg yttra enfaldiga ord.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quamvis vitiose percipiant, stulta non dicent qui attente consi- derantcs scientiae subtilis auditores sunt. (CDXVII)

போலிய (Polski)
Nie bądź nigdy w swych sądach zanadto pochopny, Zważ, że możesz mieć złe rozeznanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22