கல்வி அறிவு மட்டும் போதுமா? போதாது!
ஒழுக்கம் உடையவர் அனுபவ வாயிலாக கூறும் வாய்மொழிகளை, கல்வி அறிவுடையோரும் ஆர்வத்தோடு கேட்க வேண்டும். அதனால் அறிவு தெளிவு பெறும்.
அத்தகைய மொழிகளை கேட்பதால் என்ன பயன்?
வழுக்கும் சேற்று நிலத்தில், கீழே விழுந்துவிடாமல் நடக்க உதவும் ஊன்றுகோல் போல் உதவியாக இருக்கும்.
ஒழுக்கம் உடையவர் என்றால் ஞானிகள், மகான்கள், சுயநலம் இல்லாத பொது நலம் கருதுவோர்; திரிகரணம் என்று சொல்லக்கூடிய மனம் வாக்கு உடல் மூன்றாலும் தூய்மையானவர்கள்.
(துன்பம், சோர்வு, குழப்பம் முதலானவை ஏற்படும் நன்மொழிகள், அருள் மொழிகள் நல்ல தெளிவை அளிக்கக் கூடியன).