கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.   (௪௱௧ - 401) 

நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையிலே சென்று ஒருவன் பேசுதல், அரங்கம் இழைக்காமலே வட்டாடினால் போன்ற அறியாமையான செயல் ஆகும்  (௪௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.  (௪௱௧)
— மு. வரதராசன்


அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.  (௪௱௧)
— சாலமன் பாப்பையா


நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்  (௪௱௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀗𑁆𑀓𑀺𑀷𑁆𑀶𑀺 𑀯𑀝𑁆𑀝𑀸𑀝𑀺 𑀬𑀶𑁆𑀶𑁂 𑀦𑀺𑀭𑀫𑁆𑀧𑀺𑀬
𑀦𑀽𑀮𑀺𑀷𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑁄𑀝𑁆𑀝𑀺 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁕𑁤𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Arangindri Vattaati Yatre Nirampiya
Noolindrik Kotti Kolal
— (Transliteration)


araṅkiṉṟi vaṭṭāṭi yaṟṟē nirampiya
nūliṉṟik kōṭṭi koḷal.
— (Transliteration)


Addressing a gathering with poor scholarship Is like playing dice without a board.

ஹிந்தி (हिन्दी)
सभा-मध्य यों बोलना, बिना पढ़े सदग्रन्थ ।
है पासे का खेल ज्यों, बिन चौसर का बंध ॥ (४०१)


தெலுங்கு (తెలుగు)
జూదమాడినట్లు చదరంగ మదిలేక
చదువు కొనక వాదు సలువు టెల్ల. (౪౦౧)


மலையாளம் (മലയാളം)
ഗ്രന്ഥ മോതാത്തവൻ വിജ്ഞസംഘത്തോടരിയാടിയാൽ പകിടവേദി കേറാതെ കട്ടയുരുട്ടും പോലെയാം (൪൱൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಜ್ಞಾನವೃದ್ದಿಗೆ ಕಾರಣವಾದ ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದದೆ ಕಲಿತವರ ಸಭೆಯಲ್ಲಿ ಮಾತನಾಡುವುದು, ಚದುರಂಗದ ಮನೆಯಿಲ್ಲದೆ ಪಗಡೆಯಾಡಿದಂತೆ. (೪೦೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अनधीत्यैव सद्‌ग्रन्थान् सद्‌गोष्ठयां य: प्रभाषते ।
विना रङ्गस्थलीमक्षप्रयोक्त्रा स भवेत् सम: ॥ (४०१)


சிங்களம் (සිංහල)
සපිරුණු දැනීමක් - නැතිවම දෙන කතාවක් කොටු නැති ලෑල්ලේ - කවඩි දැමුමට දෙවැනි නොමවේ (𑇤𑇳𑇡)

சீனம் (汉语)
不學無術之人而登講台, 形同不明賭道而入賭塲. (四百一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Menaiki minibar tanpa ilmu sa-chukup-nya sama-lah saperti memain dadu tanpa papan petak-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
광범위한연구가없이방대한학식을말하는것은주사위판없이주사위놀이를하는것과같다. (四百一)

உருசிய (Русский)
Беседовать с учеными, не владея многими знаниями, подобно тому,,то играть в шахматы на доске, не разделенной на квадраты

அரபு (العَرَبِيَّة)
الداخل فى مجلس بغير علم كمثل من يلعب الشطرنج بغير أن يعرف فنه (٤٠١)


பிரெஞ்சு (Français)
Discourir dans une réunion, sans avoir une instruction pleine et entière, c'est jouer aux dés sans damier.

ஜெர்மன் (Deutsch)
In der Versammlung zu sprechen, ohne aus Büchern zu lernen, gleicht dem Damespiel, ohne das Feld zu finden.

சுவீடிய (Svenska)
Att disputera utan stöd av visdomsfyllda böcker är som att spela schack utan rutat bräde.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Sine plena scientia in coetu (doctorum) loqui perinde est atque in tabula divisionibus carente globis projiciendis ludere (CDI)

போலிய (Polski)
Nie radź głupio, gdy radzić ci przyjdzie ochota, Wszak nie zagrasz, nie znając gry w kości.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அரங்கும் அறிவும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

கட்டம் போடாமல், தாயம் ஆடமுடியாது. ஏனென்றால் எந்தக் காயை எங்கே வைப்பது, எதற்காக வைப்பது என்பது புரியாது.

அதுபோல, நூல்களைப் படிக்காத - கல்வி அறிவு இல்லாதவன் அறிஞர்கள் கூடியுள்ள சபையில் பேச முடியாது. அறிவு பெறாதவன் என்ன சொல்ல முடியும்? எதைப் பற்றி கூற இயலும்?

(அரங்கு அமைத்து ஆடுவதில், தாயத்தோடு சொக்கட்டான், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.)


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22