இறைமாட்சி

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.   (௩௱௮௰௨ - 382) 

அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்  (௩௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.  (௩௱௮௰௨)
— மு. வரதராசன்


அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.  (௩௱௮௰௨)
— சாலமன் பாப்பையா


துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்  (௩௱௮௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀜𑁆𑀘𑀸𑀫𑁃 𑀈𑀓𑁃 𑀅𑀶𑀺𑀯𑀽𑀓𑁆𑀓𑀫𑁆 𑀇𑀦𑁆𑀦𑀸𑀷𑁆𑀓𑀼𑀫𑁆
𑀏𑁆𑀜𑁆𑀘𑀸𑀫𑁃 𑀯𑁂𑀦𑁆𑀢𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀬𑀮𑁆𑀧𑀼 (𑁔𑁤𑁢𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Anjaamai Eekai Arivookkam Innaankum
Enjaamai Vendhark Kiyalpu
— (Transliteration)


añcāmai īkai aṟivūkkam innāṉkum
eñcāmai vēntark kiyalpu.
— (Transliteration)


These four unfailing mark a king: Courage, liberality, wisdom and energy.

ஹிந்தி (हिन्दी)
दानशीलता निडरपन, बुद्धि तथा उत्साह ।
इन चारों से पूर्ण हो, स्वभाव से नरनाह ॥ (३८२)


தெலுங்கு (తెలుగు)
నిర్బయమ్ము, నీని, నిర్మలజ్ఞానమ్ము,
పట్టుదలయు నాల్గు ప్రభున కుండు. (౩౮౨)


மலையாளம் (മലയാളം)
ഭയരാഹിത്യവും, ദാനശീലവും, പിൻവിവേകവും, ഉത്സാഹമീ ഗുണമ നാലും രാജനിൽ നിലകൊള്ളണം (൩൱൮൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಧೈರ್ಯ, ದಾನ, ಜ್ಞಾನ ಮತ್ತು ಪ್ರಯತ್ನ- ಈ ನಾಲ್ಕು ಗುಣಗಳಲ್ಲಿ ಯಾವಾಗಲೂ ಸೋಲದೆ ನಿರಂತರವಾಗಿರುವುದೇ ಅರಸನ ಗುಣಗಳೆನಿಸುವುದು. (೩೮೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दातृत्वं ज्ञानसम्पत्ति: उत्साहो धीरता तथा ।
गुणैरेतैश्चतुर्भिर्यो नित्ययुक्त: स पार्थिव: ॥ (३८२)


சிங்களம் (සිංහල)
නුවණ සහ දිරියද - දානය නිබය තාවය රට කරන නිරිඳුට - මෙ සිව් කරුණුත් සිරිය වේමැයි (𑇣𑇳𑇱𑇢)

சீனம் (汉语)
勇氣, 大量, 智慧, 精力, 四者, 王者有之, 乃可不敗. (三百八十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Empat keutamaan tidak dapat tidak ada pada raja: keberanian, ke- dermawanan, kebijaksanaan dan semangat.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
용기, 자선, 지혜와열정은왕의네가지장점이다. (三百八十二)

உருசிய (Русский)
Суть истинного повелителя страны составляют всего лишь четыре незамутненные качества: бесстрашие, великодушие, мудрость и энергичная настойчивость

அரபு (العَرَبِيَّة)
عدم الخوف والسنحاء والحكمة والقوة لهي من الصفات التى لا بد أن توجد فى الملك (٣٨٢)


பிரெஞ்சு (Français)
Voici les quatre qualités naturelles du Roi : vaillance, libéralité, sagesse et énergie.

ஜெர்மன் (Deutsch)
Furchtlosigkeit, Freigebigkeit, Weisheit und Eifer -diese vier zu besitzen ist die Tugend des Königs.

சுவீடிய (Svenska)
Tapperhet, givmildhet, visdom, entusiasmdessa fyra egenskaper utmärker en rätt konung.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Haec quattuor: vacuitatem a timore, liberalitatem, prudentiam et animi robur, non deficere - regum proprium est. (CCCLXXXII)

போலிய (Polski)
Męstwo, hojność, entuzjazm użyte sensownie -- Oto główne przymioty seniorów.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22