துறவு

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.   (௩௱௪௰௫ - 345) 

பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்; ஆகவே, மற்றைய ஆசைத் தொடர்புகள் எல்லாம் எதற்காகவோ?  (௩௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.  (௩௱௪௰௫)
— மு. வரதராசன்


இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?  (௩௱௪௰௫)
— சாலமன் பாப்பையா


பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?  (௩௱௪௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀧𑁆𑀧𑀸𑀝𑀼 𑀏𑁆𑀯𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀶𑀼𑀓𑁆𑀓𑀮𑁆
𑀉𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀉𑀝𑀫𑁆𑀧𑀼𑀫𑁆 𑀫𑀺𑀓𑁃 (𑁔𑁤𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Matrum Thotarppaatu Evankol Pirapparukkal
Utraarkku Utampum Mikai
— (Transliteration)


maṟṟum toṭarppāṭu evaṉkol piṟappaṟukkal
uṟṟārkku uṭampum mikai.
— (Transliteration)


When the body itself is a burden on the way to liberation, Why carry other attachments?

ஹிந்தி (हिन्दी)
भव- बन्धन को काटते, बोझा ही है देह ।
फिर औरों से तो कहो, क्यों संबन्ध- सनेह ॥ (३४५)


தெலுங்கு (తెలుగు)
పుట్టువందె రోత బుట్టిన వారికి
పలసినట్టి దేది వసుధ లేదు. (౩౪౫)


மலையாளம் (മലയാളം)
തുടർജന്മമൊഴിച്ചീടാനിച്ഛിപ്പോർക്കുടൽ ഭാരമാം നിലനിൽപ്പറ്റമറ്റൊന്നിലാശ വെക്കുന്നതെന്തിനായ്? (൩൱൪൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹುಟ್ಟನ್ನೇ ಹರಿದುಕೊಳ್ಳಲು ಪ್ರಯತ್ನಿಸುವವರಿಗೆ ಶರೀರವೇ ಒಂದು ಹೊರೆ; ಹಾಗಿರುವಾಗ (ವಸ್ತು ಮೋಹದಿಂದ) ಮತ್ತಷ್ಟು ತೊಡರು, ಸಂಕಟಗಳನ್ನು ಬರ ಮಾಡೀಕೊಳ್ಳುವುದೇಕೆ? (೩೪೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
संसारान्मुक्तिकामस्य देहो भवति भारद:।
तथा सत्यन्यदेहेन कुत: सम्बन्धकल्पनम्॥ (३४५)


சிங்களம் (සිංහල)
සිරුරත් වැඩිවි නම්- ඉපදුම සිඳින වුන්හට එබඳු පුඟූලන් හට- කූමක් පිණිසද ? වෙනත් බැඳුමක් (𑇣𑇳𑇭𑇥)

சீனம் (汉语)
欲求解脫輪迴者, 視身軀已屬累贅之物; 身外之物, 更何足重輕. (三百四十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bagi mereka yang ingin menamatkan penjelmaan-nya, jasmani-nya pun merupakan berkelebehan: betapa lagi belenggu2 lain-nya pula.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
환생을 추구하지 않는 자들에게 신체는 부담이기 때문에, 어떤 세속적인 결합도 없어야 한다. (三百四十五)

உருசிய (Русский)
Для детей, которые жаждут прекратить череду новых рождений, даже собственное тело является обузой. Какой же толк во всех прочих привязанностях?

அரபு (العَرَبِيَّة)
إن الذين لا يودون من أن يتوالدوا فى هذه الدنيا يعدون أبدانهم نافلة وفضلة فلا يرغبون من الإتصال إلى علاقات أخرى (٣٤٥)


பிரெஞ்சு (Français)
A celui qui s’efforce d’éviter la renaissance, le corps est de trop. Qu’adviendra-t-il, s’il désire encore d’autres biens.

ஜெர்மன் (Deutsch)
Wer die Geburten abschneiden will, dem ist selbst der Körper überflüssig - warum sollte er anderen Dingen nachhangen?

சுவீடிய (Svenska)
För dem som vill skära av återfödelsens kretslopp är även kroppen en börda, för att då icke tala om andra fjättrar.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quid, quaeso, erit , cui adhaerescant? Qui id agunt, ut cursus ortuum praecidatur, iis ipsum corpus molestum est. (CCCXLV)

போலிய (Polski)
Zniwecz w sobie egoizm, a zniszcz pożądania I uśpione od lat niepokoje.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22