நிலையாமை

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.   (௩௱௪௰ - 340) 

உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்!  (௩௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.  (௩௱௪௰)
— மு. வரதராசன்


உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!  (௩௱௪௰)
— சாலமன் பாப்பையா


உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது  (௩௱௪௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀓𑁆𑀓𑀺𑀮𑁆 𑀅𑀫𑁃𑀦𑁆𑀢𑀺𑀷𑁆𑀶𑀼 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁄 𑀉𑀝𑀫𑁆𑀧𑀺𑀷𑀼𑀴𑁆
𑀢𑀼𑀘𑁆𑀘𑀺𑀮𑁆 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁔𑁤𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Pukkil Amaindhindru Kollo Utampinul
Thuchchil Irundha Uyirkku
— (Transliteration)


pukkil amaintiṉṟu kollō uṭampiṉuḷ
tuccil irunta uyirkku.
— (Transliteration)


Is there no permanent refuge for the soul, Which takes a temporary shelter in the body?

ஹிந்தி (हिन्दी)
आत्मा का क्या है नहीं, कोई स्थायी धाम ।
सो तो रहती देह में, भाड़े का सा धाम ॥ (३४०)


தெலுங்கு (తెలుగు)
దేహవస్థిరమ్ము స్థిరమైన వాసమ్ము
నెఱుగలేక జీవి తిరుగుటేల? (౩౪౦)


மலையாளம் (മലയാളം)
നോവുതങ്ങും ശരീരത്തിലൊരു കോണിൽ വസിച്ചിടും ആത്മാവിന്ന് സ്ഥിരം ഗേഹമെങ്ങും സിദ്ധിച്ചതില്ലപോൽ (൩൱൪൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
(ರೋಗಗಳ ನೆಲೆಯಾದ) ಶರೀರದಲ್ಲಿ (ಪ್ರಯಾಣಿಕನಂತೆ) ತಂಗಿರುವ ಜೀವಕ್ಕೆ ಇನ್ನೂ ನೆಲೆಯಾದ ಬೀಡೊಂದು ಸಿದ್ದವಾಗಿಲ್ಲವೋ ಏನೋ? (೩೪೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
रोगाधीनशरीरस्य कोणे जीव: स्थितोऽधिपै:।
व्याधिभिर्हिसितोऽद्यापि किं न लेभे स्थिरं गृहम्?॥ (३४०)


சிங்களம் (සිංහල)
කයින් කය තූළ වැද- ලැගූම් ගනිමින් සිටිනේ පණෟ ඔබට සැමදා- ලැගූම් ගැනුමට තැනක් නැද්දෝ (𑇣𑇳𑇭)

சீனம் (汉语)
靈魂無物可永託耶? 何以寄寓於易朽之身驅耶? (三百四十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tidak-kah nyawa mempunyai kediaman-nya sendiri, sa-hingga perlu ia menchari tempat tinggal di-dalam jasmani manusia yang tidak berharga sa-kali?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
영혼에는 영구적인 집이 없다. 다만 영혼은 일시적인 안식처로 신체를 택할 뿐이다. (三百四十)

உருசிய (Русский)
О, неужели душа, столь стремящаяся обрести убежите в хрупком теле, так и не найдет прочного пристанища?

அரபு (العَرَبِيَّة)
لماذا تتوطن الروح فى جسد هالك ؟ اليس لها موطنا مستقلا (٣٤٠)


பிரெஞ்சு (Français)
La vie n’a pas de gîte permanent dans le corps, habité par toutes les maladies; elle ne l’habite qu’à titre de locataire.

ஜெர்மன் (Deutsch)
Hat nicht die Seele ein dauerhafres Heim, die vorübergehend in einem Körper wohnt?

சுவீடிய (Svenska)
Är det månntro därför att hon saknar en beständig boning som själen söker skydd i kroppen?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Anima, quae in corpore tanquam in hospitio moratur, domum nullam habet. - Nonne ita est? (CCCXL)

போலிய (Polski)
Dusza szuka uparcie stałego mieszkania, A znajduje zazwyczaj ruiny.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒண்டுக்குடியில் வாழும் உயிர் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

இந்த உயிரானது வாதம், பித்தம், கபம் என்னும் நோயுள்ள உடலில் ஒண்டுக் குடித்தனம் இருந்து வாழ்ந்து வருகிறது.

ஆனால், நோய் நொடி இல்லாமல், நிலையாக வாழ்வதற்கு தனக்கென சொந்தமான ஒரு உடல் இல்லை.

இப்படியாக, இந்த உயிர் ஒரு உடலில் நிலைத்திருக்காமல், வெவ்வேறு உடலில் புகுந்து புகுந்து, ஓடிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தால்,

ஒவ்வொரு உடலிலும் சில காலம் ஒண்டு குடித்தனம் இருந்துவிட்டு ஓடிப்போகிற இந்த உயிரானது, நிரந்தரமாக, நான் தங்கியிருப்பதற்கு தகுந்த ஒரு வீட்டை தேடி அலைகிறது போலும்!


புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22