நிலையாமை

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.   (௩௱௩௰௪ - 334) 

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், ‘நாள்’ என்பது ஒரு கால அளவு போலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும்  (௩௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.  (௩௱௩௰௪)
— மு. வரதராசன்


நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.  (௩௱௩௰௪)
— சாலமன் பாப்பையா


வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்  (௩௱௩௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀸𑀴𑁂𑁆𑀷 𑀑𑁆𑀷𑁆𑀶𑀼𑀧𑁄𑀶𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀉𑀬𑀺𑀭𑁆𑀈𑀭𑀼𑀫𑁆
𑀯𑀸𑀴𑀢𑀼 𑀉𑀡𑀭𑁆𑀯𑀸𑀭𑁆𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆 (𑁔𑁤𑁝𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Naalena Ondrupor Kaatti Uyir
EerumVaaladhu Unarvaarp Perin
— (Transliteration)


nāḷeṉa oṉṟupōṟ kāṭṭi uyir'īrum
vāḷatu uṇarvārp peṟiṉ.
— (Transliteration)


A day in reality is nothing but A relentless slicing of a saw through one's life.

ஹிந்தி (हिन्दी)
काल-मान सम भासता, दिन है आरी-दांत ।
सोचो तो वह आयु को, चीर रहा दुर्दान्त ॥ (३३४)


தெலுங்கு (తెలుగు)
కాలమేదొ కాదు కఱకు ఱంపము జూడ
దినదినమ్ము నాయువును హరించు. (౩౩౪)


மலையாளம் (മലയാളം)
നാളാകുന്നതളക്കുന്ന വാളാകുന്നു ശരീരത്തെ ദിനം തോറുമറുത്തും കൊണ്ടുയിരേവേർപ്പെടുത്തിടും (൩൱൩൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬಾಳನ್ನು ಶೋಧಿಸಿ ಅರಿತವರ ದೃಷ್ಟಿಯಲ್ಲಿ, ದಿನ ಎಂಬುದು ಒಂದು ಕಾಲದ ಗಡಿಯಂತೆ ಕಾಣಿಸಿಕೊಂಡು, ಒಡಲನ್ನು ಸೀಳುತ್ತಿರುವ ಗರಗಸವಾಗಿ ತೋರುವುದು. (೩೩೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कृपाणसदृशो भूत्वा दिवस: तत्त्ववित्तमान्।
विशस्य क्रमश: काले क्षीणप्रणाण् करोत्यहो॥ (३३४)


சிங்களம் (සිංහල)
සැනසුම දෙන එකක් - සේ පෙන්වමින් ආයුව පණ ඉරන කියතැයි- සිතති උතූමෝ නො තිර බව දත් (𑇣𑇳𑇬𑇤)

சீனம் (汉语)
時間似巋無爲, 實則猶如刀鋸, 時時刻刻鋸短人之生命. (三百三十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Waktu kelihatan sa-olah2 tiada berdosa: tetapi ia ada-lah gergaji yang scnantiasa memotong kehidupan manusia.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
현명한 자는 사람의 생명을 절단하는 칼처럼 하루를 고려한다. (三百三十四)

உருசிய (Русский)
Понятие об одном дне каким-то людям покажется чепухой, но для тех, которые умеют постичь суть вещей, дни — это меч, который. неумолимо отсекает жизнь человека

அரபு (العَرَبِيَّة)
الوقت يبدو ساذجا ومعصوما ولكنه فى الحقيقة منشار يجرى ويستمر فى قطع حياة الناس (٣٣٤)


பிரெஞ்சு (Français)
Le temps a l’apparence d’être mesuré par la jour. En réalité, pour ceux qui le connaissent, il est une scie, dont les dents coupent continuellement la vie.

ஜெர்மன் (Deutsch)
«Tag» scheint etwas in sich selbst zu sein – wer die Wahrheit kennt, dem ist er nur die Säge, die das Leben durchirennt.

சுவீடிய (Svenska)
För somliga ter sig dagen som ett mått av tid. För de visa är den däremot en såg som sågar bort livet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Se ostendens tanquam id, quod dies dicitur, vita (revera) est secans ensis, si inveniuntur, qui hoc intelligant (CCCXXXIV)

போலிய (Polski)
Nawet najpomyślniejsze zdarzenie pożera Cenny czas – jakżeż bardzo znikomy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நாளும் வாளும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பிறந்து, வளர்ந்து, மறைகின்ற தன்மையுடைய உடலைப் பெற்ற உயிர்களுக்கு எல்லாம், அந்த உடல் நின்ற கால அளவை காட்டுவது நாள். அடுத்து அடுத்து பல நாட்களாக வந்து காலத்தைக் காட்டுவது.

அத்தையை நான் சாதாரணமானது அல்ல!

அது வாள்- கத்தி போன்றது. ஏனென்றால், உடலோடு கூடிய வாழ்வானது, ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போவதால், அப்படிக் குறைவை செய்கின்ற நாள் வாள் என்று கூறப்படுகிறது. அதாவது, வாள் வெட்டிக்கொண்டே போகிறது அல்லவா?

உடலின் நிலையாமையையும் உடலின் பயனையும் அறியாதவர்கள் அந்த நாளை வீண் பொழுதாக கழிப்பார்கள்.

உடலில் உற்ற பயனை அடையவேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்க்கு நாளானது வாளாகக் காணப்படும்.

(வாளை ரம்பம் என்றும் கூறுவார்கள்)


நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22